பான் கார்டுக்கு வந்த சிக்கல்..!! எல்லாமே மாறுது..!! மக்களே புதிய ரூல்ஸை பாருங்க..!!
இந்திய குடிமக்களுக்கு, வருமான வரித் துறை சார்பில் வழங்கப்படும் பான் கார்டு முக்கிய அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. சில பண பரிவர்தனைகளுக்காக மக்கள் பான் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், சமீபகாலமாக அனைத்து வங்கிகளும் வங்கி தேவைக்காக மக்களிடம் பான் கார்டுகளை கேட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல், வங்கியிலோ அல்லது தபால் நிலயத்திலோ அக்கவுண்ட் திறப்பதற்கு பான் கார்டு அவசியமாகிவிட்டது. அதே போல், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பான் கார்ட் தேவையா? அதற்கான விதிகள் என்ன? என்பதை குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நமது நிரந்தர அக்கவுண்ட் நம்பரை குறிப்பதுதான் இந்த பான் கார்ட். இதில் 10 இலக்கு கொண்ட நம்பர் மற்றும் ஆல்பபட் எழுத்துக்கள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு நபர் மற்றும் நிறுவனத்துக்கு இந்த பான் கார்டு எண் மாறுபடும். குறிப்பாக, வரி தாக்கல் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு இது மிகவும் முக்கியம். மொத்தமான பண பரிவர்த்தனை செய்யும் தனி நபர் மற்றும் நிறுவனங்களை கண்காணிக்க, அவர்களின் பான் டேட்டாவை வருமான வரித்துறை கண்காணித்து வருவது வழக்கம்.
இந்தியாவில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு பான் கார்டு அவசியமில்லை. ஆனால், ஒரே நாளில் ரூ. 50,000-க்கு மேல் உள்ள வங்கி டெபாசிட்டுகளுக்கு பான் கார்டு கட்டாயம். அதே போல, ஒரு நிதியாண்டில் வாடிக்கையாளர்களின் மொத்த டெபாசிட் தொகை ரூ. 20 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்ட் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இது வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே பொருந்தும். 2022ஆம் ஆண்டு பான் சமர்ப்பிப்பு தொடர்பான விதிகளை CBDT மாற்றியுள்ளது.
அதன் படி, ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது பணத்தை எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் பான் அல்லது ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலக கணக்குகளில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் தொகை டெபாசிட் அல்லது தொகை எடுப்பதற்கு, பான் அல்லது ஆதார் விவரங்களை கொடுப்பது அவசியம். ஆனால் ரூ.20 லட்சம் வரம்பு என்பது ஒரு வருடத்திற்குள் அனைத்து டெபாசிட்கள் அல்லது பணத்தை எடுப்பதற்கான கூட்டுத்தொகையாகும்.
கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளும் இந்த வரம்பிற்குள் அடங்கும். எனவே, நீங்கள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கவும். அல்லது பரிவர்த்தனையின் போது குறைந்தபட்சம் e-PAN ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம்.
Read More : பட்டா மாற்றம்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!! மக்களே இனி கவலை வேண்டாம்..!!