For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டீ, காஃபி குடிக்கும்போது மாத்திரையை எடுத்துக் கொள்கிறீர்களா..? பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

03:15 PM Apr 04, 2024 IST | Chella
டீ  காஃபி குடிக்கும்போது மாத்திரையை எடுத்துக் கொள்கிறீர்களா    பெரிய ஆபத்து காத்திருக்கு
Advertisement

இப்போதெல்லாம் பலர் சில காரணங்களுக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். பொதுவாகவே, மாத்திரையை தண்ணீருடன் தான் விழுங்குவோம். ஆனால், சிலர் டீ அல்லது காபியுடன் மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது மாத்திரை சாப்பிட்ட உடனேயே டீ, காபி குடிப்பார்கள். இப்படி செய்வது நல்லதா..? டீ மற்றும் காபியுடன் மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதுபற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Advertisement

பொதுவாகவே, டீ, காபியை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. டீ, காபி இல்லாமல் அந்த நாளை தொடங்குவதில்லை. ஆனால், சிலர் டீ அல்லது காபியுடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி செய்வது மருந்தின் செயல்திறனைக் குறைப்பது மட்டுமின்றி, அது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். எப்படியெனில் டீ, காபியில் உள்ள காஃபின் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மருந்துகளை சாப்பிட்டால் உடலில் அந்த மருந்தின் செயல்பாட்டை பாதிக்கலாம். இப்போது எந்தெந்த மருந்துகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தைராய்டு மருந்தை எப்போதும் வெறும் வயிற்றில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் அது உடலில் நன்றாக உறிஞ்சப்படுகிறது. எனவே, இந்த மருந்தை எடுத்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து தான் டீ, காபி குடிக்க வேண்டும். மீறினால், டீ காபியில் உள்ள காஃபின் தைராய்டு மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும். மேலும், உடலில் தைராய்டு சமநிலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சளி, இருமலுக்கு மாத்திரை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், டீ-காபியுடன் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால், தீங்கு விளைவிக்கும். இதனால் கவலை மற்றும் தூக்க பிரச்சினைகள் ஏற்படும்.

டீ-காபியுடன் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதுபோல், காஃபின் நீரிழிவு அறிகுறிகளை மோசமாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், டீ-காபியுடன் அல்சைமர் மருந்தை சாப்பிட கூடாது. ஏனெனில், டீ-காபியில் உள்ள காஃபின் மூளையில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் மருந்து மூளைக்கு வராமல் தடுக்கிறது. இது பிரச்சனையை மோசமாக்குகிறது.

இதுதவிர, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மன அழுத்த போன்ற மருந்துகளையும் டீ-காபியுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்னும் சொல்ல போனால் எந்த மருந்தையும் டீ-காபியுடன் எடுத்துக் கொள்ள வேண்டாம். விரும்பினால்
குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

Read More : Ajith | விடாமுயற்சி படப்பிடிப்பில் விபத்து..!! உயிர் தப்பிய நடிகர் அஜித்..!! பதறவைக்கும் வீடியோ..!!

Advertisement