உயரமான தலையணை வைத்து தூங்குகிறீர்களா?… தலைக்கு வரும் ஆபத்து!… முகப் பிரச்சனைக்கும் இதுதான் காரணம்!
தலைக்கு தலையணை வைப்பது சுகமாக இருந்தாலும் அவை உடலுக்கும் உறுப்புகளுக்கும் நன்மை செய்யாது என்பதுதான் கசப்பான உண்மை. உடலை தாங்கும் எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும். நடக்கும் போதும், உட்காரும் போது நிமிர்ந்து நேராக முதுகுதண்டு வளையாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது போலத்தான் படுக்கும் போதும் உடலை நேராக குறுகலில்லாமல் நீட்டி மடக்காமல் படுக்க வேண்டும். சரிசமமாக படுக்க வேண்டும். அப்படி படுப்பதிலும் பல முறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
மல்லாந்து படுக்க கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள், செரிமான கோளாறு இருப்பவர்கள், குப்புற படுக்கவே கூடாது. அதே போன்று இடது கைபக்கமாக படுக்க வேண்டும். இப்படிதான் படுக்க வேண்டும். இப்படி படுத்தால் தான் உடல் உறுப்புகளுக்கு உரிய ஓய்வும், பணி தடங்கலில்லாமலும் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. சரி தலையணை விஷயத்துக்கு வருவோம். உடல் முழுக்க சமமாக தரையிலோ பஞ்சு மெத்தையிலோ கிடத்தி பிறகு தலையை மட்டும் உயரமாக தலையணை போட்டு படுப்பதால் அவை கழுத்துபகுதியில் இருக்கும் எலும்புகளை தேய்மானத்துக்கு உண்டாக்கும். உடனடியாக நிகழக்கூடியதல்ல என்றாலும் சிறுவயது முதலே தலையணை கொண்டு படுப்பதன் மூலம் வெகு விரைவில் இந்த பிரச்சனை உண்டாகும். வயதான பிறகு கழுத்து நரம்புகள் பாதிக்கப்படும். படிப்படியாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு.
தலையணை வைத்து படுத்தால் பாதிப்பு உண்டாகுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில் கழுத்து எலும்பு தேய்மானத்துக்கு உள்ளானவர்கள்,மூளைக்கு செல்லும் ரத்த ஓட்ட பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவரும் உயரமான தலையணை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லகூடிய குழாயானது கழுத்துபகுதியில் இருக்கிறது. இவை அழுத்தத்துக்கு உள்ளாகும் போது மூளைக்கு கிடைக்கவேண்டிய ரத்தம் போதுமான அளவு கிடைக்காது. தற்போது பலரும் முதுகுவலி பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதை மேலும் தீவிரபடுத்திவிடுகிறது தலையணை.
இன்னும் சிலர் அழுத்தமுடியாத அளவுக்கு கெட்டியான தலையணையை பயன்படுத்துவார்கள். இவர்களுக்கும் இதே நிலைமைதான். முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை, உடல் வலி, முதுகுவலி போன்ற உபாதை உண்டாகும். குறிப்பாக காலையில் எழுந்திருக்கும் போதே தோள்பட்டை முதுகுவலியோடு தான் எழுவார்கள். ஆனால் இது உடல் சோர்வு என்று நினைப்பார்கள். உண்மையில் தலையணை தந்த பிரச்சனைதான் இது என்பதை பெரும்பாலானவர்கள் அறிவதில்லை.
உங்கள் தலையணை உங்கள் முகப்பருக்களுக்கு காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிபுணர்களின் கருத்துப்படி, உங்கள் தலையணை உறை போன்ற சில பொருட்களுடன் உராய்வை ஏற்படுத்தும் உங்கள் சருமத்தால் முகப்பரு மெக்கானிகா தூண்டப்படுகிறது.கூடுதலாக, வாரத்திற்கு ஒருமுறை தலையணை உறைகளை சலவை செய்யாமலோ அல்லது மாற்றாமலோ இருந்தால், உங்கள் முகத்தின் தோலில் உள்ள எண்ணெய்கள் மற்றும் அழுக்குகள் அதிகமாக வெளிப்படும்.