For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொடுத்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா பிரதமரே? - மோடியை விளாசிய நவீன் பட்நாயக்!

12:24 PM May 12, 2024 IST | Mari Thangam
கொடுத்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா பிரதமரே    மோடியை விளாசிய நவீன் பட்நாயக்
Advertisement

பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார். 

Advertisement

ஒடிசாவில் உள்ள  21 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இதே தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக  போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  "ஒடிசா மாநிலத்தில் உள்ள  அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும்  காகித குறிப்பு ஏதுமின்றி  சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால்  விடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று, பிரதமர் மோடி அவர்களே, தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?” என நவீன் பட்நாயக் பதில் கேள்வி  எழுப்பியுள்ளார். ஒடிசா மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதை குறிப்பிட்டு நவீன் பட்நாயக் நாயக் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

Advertisement