ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய நபரை நினைவிருக்கா? அடுத்த ஷாக் என்ன தெரியுமா?
ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்ற நபர் நாயாக மாறப் போகிறேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதை பலரும் மறந்திருக்கமாட்டீர்கள். நாயாக மாறுவதுதான் தனது வாழ்க்கையின் லட்சியம் எனக் கூறிய அவர், இனிமேல் வேறொரு விலங்காக மாற விரும்புவதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார். அந்த நபர் தனது மனித உருவத்தில் இருந்து நாயாக மாறுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் மேல் செலவிட்டுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவருக்கு சிறு வயது முதலே நாய்கள் மீது தீராத காதல். நாயாக பிறந்திருக்கலாம் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறிக்கொண்டே இருப்பாராம். திடீரென ஒரு நாள் நாயாகவே மாறி அதிர்ச்சியையும் தந்துள்ளார். தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் டோகோவை நாயாக மாற்றி உள்ளது.
இவ்வாறு உருவாக்க 40 நாட்கள் ஆகியிருக்கிறது. தத்ரூபமாக தெரியும் சிலைகள், உடைகள், 3-டி மாடல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. டோகோ கூலி இனத்தை சேர்ந்த நாயை போல வடிவமைக்கப்பட்டு உள்ளார். இது நான்கு கால்களில் நடக்கும் உண்மையான நாயின் தோற்றத்தை உருவாக்குகிறது" என்று ஜெப்பெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுனார்.
அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முதல் முறையாக தான் நாய் உருவத்துக்கு மாறியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் மிருகமாக இருக்க விரும்புகிறேன் தலைப்பில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ஜெர்மன் தொலைக்காட்சிக்காக ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாயாக மாறப் போகும் முடிவை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இனிமேல் வேறொரு விலங்காக மாற விரும்புவதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர், தனது கனவுகள், ஆசைகள் குறித்து ஜப்பானிய பத்திரிக்கைகளிடம் பகிர்ந்து கொண்டார். தற்போது பாண்டா, நரி, கரடி அல்லது பூனை ஆகியவற்றில் ஒன்றாக மாற விரும்புவதாக கூறியுள்ளார்.
‘I want to be an animal’ என்ற பெயருடைய இவரது யூடியூப் சேனலில் தனது ஒட்டுமொத்த வாழ்க்கை பயணத்தையும் விலங்காக மாற எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார். எனது மீதமுள்ள வாழ்க்கையை ஒரு வித்தியாசமான விலங்காக வாழ்ந்து கழிக்க விரும்புகிறேன். இதற்கு முன்பு நான்கு வகை விலங்குகளாக மாறுவதற்கான முயற்சிகளை எடுத்தேன். ஆனால் பல நடைமுறை சிக்கல் காரணமாக அவை எதையும் செயல்படுத்த முடியவில்லை. குறிப்பாக நாய் மற்றும் மனிதனின் எலும்பு கட்டமைப்பு, கை மற்றும் கால் வளைவுகள் ஆகியவை மிகவும் வித்தியாசமாக உள்ளன. ஆகையால் நாயைப் போல் உடலை இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனக் கூறுகிறார் டோகோ.
ஒரு கரடியாகவோ, பண்டாவாகவோ அல்லது மற்றொரு நாயாகவோ முற்றிலும் மாற்றமடைய என்னால் முடியும் எனக் கூறும் அவர், பூனை அல்லது நரியாக இருப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார். தனது உண்மையான பெயர் என்ன என்பது குறித்து தெரிவிக்க விரும்பாத டோகோ, தனது புதிய முயற்சிகள், விலங்குகள் ஆவதற்கான பயிற்சிகள், நாய் உணவை சாப்பிடுவது, செல்லப்பிராணிகள் போல் நடந்து செல்வது போன்ற வீடியோக்களை தனது யுடுயூப் சேனலில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
Read more ; நாடாளுமன்ற தேர்தல் 1952: இந்தியாவில் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலின் கதை தெரியுமா?