முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்க வீட்டுக்கு பட்டா இல்லையா?… நிலம் யார் பெயரில் உள்ளது?… ஈசியா கண்டுபிடிக்க அரசு புதிய ஏற்பாடு!

06:02 AM May 16, 2024 IST | Kokila
Advertisement

Survey Number: அனைத்து நில மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு, தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் வில்லேஜ் மாஸ்டர் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளது.

Advertisement

ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். இப்படி பல்வேறு மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நில சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அந்தவகையில், சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது, அதற்கான வரைப்படம் என அனைத்து விஷயங்களும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தனி இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, அனைத்து நில மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு, தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் வில்லேஜ் மாஸ்டர் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளது. கூகுள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் மூலம் நமது வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை மிக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். பின்னர் ந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

தற்போது இந்த வில்லேஜ் மாஸ்டர் இணையத்தில் கிராமங்களில் உள்ள வீடு மற்றும் நிலங்களின் சர்வே எண்ணை மட்டுமே தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. நகர்புறங்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட வில்லை. ஆனால் நகர்புறங்களுக்கும் கொண்டு வந்தால் நில மோசடிகள் என்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.

தமிழகத்தில் மட்டும் பத்திரப்பதிவு துறையின் கணக்கீட்டின் படி சுமார் 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. அதில் வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் மட்டும் இப்போது கொடுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி வில்லேஜ் மாஸ்டரில் நகர் பகுதி, கிராம பகுதி என தனித்தனியாக பிரித்து காண்பிக்கப்படுகிறது. மேலும் அதில் வன பகுதி, தீவுகள், மலைகள் ஆகிய இடங்கள் குறித்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு சர்வே எண் தெரிந்து இருந்தால் வில்லேஜ் மாஸ்டரின் இடத்தின் எல்லை மற்றும் அருகில் உள்ள இடங்கள் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், பட்டா இல்லாத வீடு வைத்திருப்பவர்கள் இனிமேல் நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதன்படி தமிழக அரசின் தமிழ் நிலம் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவோ பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம். பட்டா மட்டுமின்றி மேலும் பல்வேறு சேவைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: TNPSC காலியிடங்கள் அறிவிப்பு…! ஜுன் 14-ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்…!

Advertisement
Next Article