அவசர தேவைக்கு கடன் வேண்டுமா..? இனி ஆதார் கார்டு இருந்தாலே போதும்..!! எத்தனை லட்சம் வரை வாங்கலாம் தெரியுமா..?
ஆதார் கார்டு என்பது தவிர்க்க முடியாத ஆவணமாக உள்ளது. இந்திய குடிமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டை அவசியம். வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் எண்கள் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. அதேபோல், அடையாள ஆவணம் மட்டுமின்றி, ஆதார் அட்டை இருந்தாலே ரூ.2 லட்சம் வரை தனிநபர் கடன் பெற முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
ஆதாரை வைத்து தனிநபர் கடன்
அவசர தேவை ஏற்பட்டால் உடனடியாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் தனி நபர் கடனை பலரும் பெறுவதை பார்க்க முடிகிறது. இப்படி தனி நபர் கடன்களுக்கு தவிர்க்க முடியாத டாக்குமெண்டாக இருக்கும் ஆதாரை பயன்படுத்தி ரூ. 2 லட்சம் வரை எளிதாக பெற முடியும். ஆதார் மூலமாக பெறப்படும் கடன்களுக்கு எவ்வித பிணையும் தேவையில்லை. உடனடியாக கடன் தேவைப்படுபவர்களுக்கு ஆதார் மூலமாக பெறப்படும் இந்த கடன் எளிதான ஒன்றாக இருக்கும். இந்த லோன்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. ஒப்புதல், நிராகரித்தல் ஆகியவை என எதுவாக இருந்தாலும் விரைவாக நடைபெறும்.
கடன் பெறுவதற்கான தகுதி என்ன..?
கடன் பெற விரும்புவோர் 21 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.15,000 முதல் ரூ.25,000ஆக இருக்க வேண்டும். மாத சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு இது பொருந்தும். பான் கார்டு அவசியம். கடைசி 3 முதல் 6 மாதங்கள் வரையிலான வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட் அவசியம். சம்பளம் பெறுவோர் தங்கள் வருமானத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
கடன் வழங்கும் வங்கிகளின் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் லோன் பெறுவதற்கான தகுதி உள்ளதா? என பார்க்க வேண்டும். கடன் வழங்கும் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட எலிஜிபிலிட்டி கால்குலேட்டர் மூலமாக நீங்கள் இதை செக் செய்ய முடியும். ஆதாரை அடிப்படையாக கொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் பயன்பாட்டில் இருக்க வேண்டும். முக்கியமாக ஆதார் உங்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை..?
ஆதார் கார்டு, பான் கார்டு, வருமானத்திற்கான சான்று ஆகியவற்றை அப்லோடு செய்ய வேண்டும். ஆவணங்களை சமர்பித்த பிறகு உங்கள் லோன் அப்ரூவ் ஆகிவிடும். நிராகரிக்கப்படுவதாக இருந்தால் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும்.