சூப்பர் வாய்ப்பு...! படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானியம்...!
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இல்லாத தொழில்கள்துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் ,மானியத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEG திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள்துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் ,மானியத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம்.
ஏற்கனவே உள்ள UYEGP மற்றும் NEEDS திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில் செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர் 45 வயது வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி திட்டத்தில்பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி., பி.சி.,சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர்க்கு 55 வயது வரையிலும் வங்கியில் விண்ணப்பிக்க தகுதி ஆகும்.