முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீங்கள் தினமும் இந்த தவறை செய்றீங்களா..? ஆண்மை குறைவு, குழந்தை பிறப்பதில் சிக்கல்..!!

07:58 AM Dec 26, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இன்றைய காலகட்டத்தில் லேப்டாப் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது. தற்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்துள்ளது. ஆனால், பலரும் மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். இப்படி செய்வது மிகவும் ஆபத்தானது. இப்படி வேலை செய்வதால் என்ன ஆபத்துகள் வரும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

தோல் புற்றுநோய் :

லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்தால், தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. லேப்டாப்பை அந்தரங்க பாகங்களுக்கு அருகில் வைப்பதால் அங்கேயும் கேன்சர் வரலாம். ஆகையால், பல முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்.

குழந்தைகளைப் பெறுவதில் சிரமம் :

லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் லேப்டாப்புடன் நெருக்கமாகப் பணிபுரிவது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். அதேபோல் ஆண்கள் மடியில் லேப்டாப்பை வைத்து வேலை செய்தால், விந்தணுக்களின் வளர்ச்சி குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து மற்றும் முதுகு வலி :

லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வதால், கழுத்து மற்றும் முதுகு பகுதிகள் வளைந்துவிடும். அந்தப் பகுதிகளில் வலியையும் உண்டாக்கும். இது போன்ற தொடர்ச்சியான வேலை நீண்ட கால வலியைத் தரும்.

கதிர்வீச்சு :

லேப்டாப் எலக்ட்ரோமோட்டிவ் சக்தியை வெளியிடுகின்றன. இவை EMF என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இந்த கதிர்வீச்சால், பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Tags :
ஆண்மை குறைவுகுழந்தைமடிக்கணினிலேப்டாப்
Advertisement
Next Article