For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நைட் டைம்ல Mobile பாக்குறீங்களா?… நிரந்தர தூக்கத்தை தொலைக்கும் ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி!

05:40 AM Mar 25, 2024 IST | Kokila
நைட் டைம்ல mobile பாக்குறீங்களா … நிரந்தர தூக்கத்தை தொலைக்கும் ஆபத்து … ஆய்வில் அதிர்ச்சி
Advertisement

Mobile: இரவு தூக்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது.

Advertisement

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கண் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எல்லோரிடமும் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலைப்பேசி தொலைக்காட்சி கணினிகளில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர்.இது போன்ற திரைகளுக்கு அடிமையாகுவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் நிலையில் பார்வை குறைபாடு கண் எரிச்சல் போன்ற கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.

காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பது முதல், இரவில் மிக நெருக்கமானவர்களுக்கு குட் நைட் சொல்வது வரையில், ஒவ்வொரு நாளும் தவிர்க்க முடியாத தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட் ஃபோன் இருந்து வருகிறது. பொழுதுபோக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகள் என பல வகைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஒரு பக்கம் இதனால் நம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். இந்த செல்போனை பெரியவர்கள் கூட அதிகம் உபயோகிப்பது தவறு என்று கூற, பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்தக் கூட சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

நாள் முழுவதும் நம் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த ஃபோனை இரவு தூங்கச் செல்லும் வரையிலும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தோம் என்றால் நம் தூக்கம் தடைபடும் என்பதை கவனிக்க வேண்டும். மெலடோனின் உற்பத்தி பாதிக்கும்… நமக்கு தூக்கம் வர வேண்டுமென்றால் அதற்கு இன்றியமையாத தேவையாக இருப்பது மெலடோனின் என்ற ஹார்மோன் ஆகும். நீண்ட நேரம் செல்ஃபோன் பார்த்துக் கொண்டிருப்பதால், அதில் இருந்து வெளிப்படுகின்ற ஊதா நிற வெளிச்சம் இந்த மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது.

தூங்குவதற்கு தாமதம்: தூங்க வேண்டிய நேரத்தில் நம் ஆர்வத்தை தூண்டுகின்ற ஏதோ ஒரு பதிவுகளை படிக்கின்றோம் அல்லது வீடியோக்களை பார்க்கின்றோம். இதனால் நம் மூளை சுறுசுறுப்பு அடைந்து மென்மேலும் சிந்திக்க தொடங்குகிறது. அதனால் சரியான சமயத்திற்கு தூங்குவது தடைபடுகிறது. இதுபோன்ற செல்போன் பயன்பாடு நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Readmore: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு…!

Tags :
Advertisement