கோயிலுக்குள் நுழையும்போது இந்த தவறை பண்ணாதீங்க..!! கண்டிப்பா காரணத்தை தெரிஞ்சிக்கோங்க..!!
இந்துக்களின் புனித தலமாக கோவில் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே கோவிலில் நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறும். இதன் காரணமாகவும் மந்திரங்கள், பாடல்கள் இசைக்கப்படுவதாலும் கோவில் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படுகிறது. எனவே தான், கோவிலுக்கு செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் குளித்து உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்பதோ அல்லது மாமிசம் உண்ணாமல் செல்ல வேண்டும் என்பதோ அதன் அர்த்தம் கிடையாது.
கோவிலுக்குள் செல்லும் போது நம் எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். நல்ல சிந்தனையுடன் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். கோயிலுக்கு செல்லும் போது கோயில் நுழைவாயிலின் முதல் படிகட்டில் கால் வைக்காமல் அதை தாண்டி செல்வது வழக்கம். அதனை பலரும் அவதானித்திருப்போம் இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? கோயில் நுழைவாயிலின் முதற்படி சற்று அகலமாதனதாகவே அமைக்கப்படும். இருப்பினும் அதனை தாண்டியே செல்ல வேண்டும்.
கோவிலுக்குள் நுழையும் முன்னர் கால்களை கழுவிவிட்டு தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு பின்னர் கோபுரத்தை வணங்கியே கோவிலுக்குள் செல்ல வேண்டும். கோவிலில் நாள் முழுவதும் மந்திரங்கள் ஓதப்பட்டு, மங்களகரமான இசைகள் ஒலிக்கப்பட்டு அந்த இடம் முழுவதும் நேர்மறை ஆற்றல்களால் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட புனிதமான இடத்திற்குள் செல்லும் போது நாம் சுமந்த செல்லும் தேவையற்ற சிந்தனைகளை சுமந்து செல்லக் கூடாது.
கோவில் படிகட்டில் கால் வைத்து உள்ளே செல்லும் போது எதிர்மறை எண்ணங்களை நாம் சுமந்து உள்ளே செல்வதாகவே அர்த்தம். அதன் காரணமாக தான் படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும் இவ்வாறு படிகட்டை தாண்டும் போது நமது எண்ணங்களில் மாற்றம் ஏற்படுகிறது. நமது உள்ளத்தில் இருக்கும் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை கோவிலுக்கு வெளியிலேயே விட்டு செல்வதை உணர்த்துவதற்காகவே கோயில் செல்லும் போது படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.
Read More : ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!