2-வது குழந்தை ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் தெரியுமா..? தம்பதிகளே யோசிங்க..!!
இரண்டாவது குழந்தையை எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறாய்? இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட்டுள்ளீர்களா? போன்ற கேள்விகளை வீட்டிற்கு அருகில் இருக்கும் நமது நலம் விரும்பிகள் அல்லது நமது உறவினர்களிடம் இருந்து அடிக்கடி கேட்டிருப்போம். இதன் மூலமாக உங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. உண்மையில் இன்னொரு குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவை எடுப்பதற்கு உதவக்கூடிய ஒரு சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பேசலாம்.
ஒருவருக்கொருவர் துணை: நீங்கள் வீட்டில் இல்லாத போது கூட உங்கள் பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதால், பயம் இல்லாமல் நீங்கள் இருக்கலாம். தங்களுடைய ஆயுட்காலம் முடிந்த பிறகு பிள்ளைகள் நிலை என்ன ஆகும் என்பதை நினைத்து கவலைப்படுபவர்களுக்கு நிச்சயமாக 2-வது குழந்தை அவசியம். இது அவர்களுக்கு ஒரு வாழ்நாள் துணையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பயம் விலகும் : உடன் பிறந்தவர்கள் இருக்கும்போது, நிச்சயமாக அவர்களுக்கு பயம் என்ற விஷயம் குறைவாகவே இருக்கும். நடு இரவில் உங்களை தேடி வர வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படாது. அவர்கள் இருவருமே ஒன்றாக விளையாடி, ஒருவருக்கொருவர் கிடைக்கும் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வார்கள். உடன் பிறந்தவர்களை வைத்திருப்பது ஒரு வித ஆதரவு உணர்வை அளித்து, பிள்ளைகளை வலுவானவர்களாக மாற்றுவதற்கு உதவுகிறது.
முன் அனுபவம் : நீங்கள் ஒரு முறை கர்ப்பம் தரித்து விட்டால், அதில் இருக்கக்கூடிய நல்லது, கெட்டது மற்றும் பயம் ஆகியவற்றை நீங்கள் நிச்சயமாக புரிந்து கொள்வீர்கள். முதல் முறையாக தாயாவது என்பது உங்களுக்கு ஒரு வித பயத்தை உண்டாக்கும். ஆனால், இரண்டாவது முறை நீங்கள் கர்ப்பம் தரிக்கும்போது, அதே பயம் நிச்சயமாக இருக்காது.
கூடுதல் ஆதரவு : சில நேரங்களில் பிள்ளையின் பிரச்சனையை கையாளுவதற்கு பெற்றோர்களால் முடியாமல் போகலாம். தலைமுறை வேறுபாடுகள் காரணமாக இது நிகழும். இதுவே உங்களுக்கு இரண்டாவது குழந்தை இருந்தால் அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, அந்த பிரச்சனையை சமாளித்து, அதிலிருந்து மீண்டு வர முயற்சிப்பார்கள்.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறன் : ஒற்றைப் பிள்ளை இருக்கக் கூடிய வீடுகளில் அன்பு மற்றும் அரவணைப்பு ஆகிய எல்லாமே பிரிவின்றி ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே கிடைக்கும். இதுவே அவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தால் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது அதை எப்படி தீர்த்து வைக்க வேண்டும் என்ற வித்தையையும் அவர்கள் இதன் மூலமாக கற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் வாழ்க்கையை எதிர் நோக்குவதற்கு சிறுபிள்ளையில் இருந்தே கற்றுக் கொள்வார்கள்.
Read More : இப்படி ஒரு மோசடியா..? இனியும் சும்மா இருக்கா மாட்டோம்..!! சுற்றுலா பேருந்துகளுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!