ரயில்வே பிளாட்பாரத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கோடு இருப்பது ஏன் தெரியுமா? இதை மீறீனால் ஆபத்து..!
ரயில்வே பிளாட்பாரத்தில் என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் தெரியுமா? இந்த விதிகளை நீங்கள் அறியவில்லை என்றால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது நடக்காமல் இருக்க இந்த விதிகளை அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இங்குள்ள மஞ்சள், சிவப்பு நிற கோடு பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ரெயில்வே நடைமேடையில் இரண்டு வண்ணங்களில் கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். அவை சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம். இந்த இரண்டு வண்ணங்களும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மஞ்சள் நிற கோடு என்றால் பயணிகள் ரயிலில் ஏறும் போது மஞ்சள் நிற கோட்டின் பின்னால் இருக்க வேண்டும். சிவப்பு நிறம் இருக்கும் அந்த கோட்டை கடக்க வேண்டாம். சிவப்பு நிறக் கோடு ஆபத்தைக் குறிக்கிறது.
இந்தியாவில், ரயில்வே பிளாட்பாரத்தை எங்கு பார்த்தாலும், ரயில் பாதையை ஒட்டி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களால் ஆன அகலமான கோடுகள் இருக்கும். அதாவது ரயில் தண்டவாளத்தில் வரும்போது பயணிகள் சிவப்பு நிற கோட்டிற்கு அருகே நிற்கக் கூடாது. சிவப்பு நிற கோட்டில் நின்றால், ரயிலின் வேகத்தால், முன்னோக்கி விழும் அபாயம் உள்ளது. சில சமயங்களில் ரயிலுக்கு அடியிலும் விழும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சிவப்பு மற்றும் மஞ்சள் கோடுகளைப் பற்றி அறிந்து, விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே பிளாட்பாரங்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கோடுகள் அமைக்கப்படும். இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. பெலோனியின் ஃபார்முலாவின்படி, ஒரு ரயில் தண்டவாளத்தில் வேகமாகச் செல்லும் போது, அதைச் சுற்றி ஒரு வெற்றிடம் உருவாகிறது. ரயில்வே பிளாட்பாரத்தில் சென்றாலும், பிளாட்பாரத்தில் இடைவெளி உள்ளது. அந்த இடத்தில் பயணிகள் இருந்தால், ரயில் அவர்களை நோக்கி இழுக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைவீர்கள்.
சில சமயம் உயிருக்கு கூட ஆபத்து நேரலாம். அதனால் அகலம் முழுவதும் சிவப்பு நிறத்தில் பெரிய பட்டையை ரயில்வே அதிகாரிகள் அமைத்துள்ளனர். அதாவது பிளாட்பாரத்தில் ரயில் செல்லும் போது பயணிகள் யாரும் சிவப்பு நிறத்தில் நிற்கவோ, உட்காரவோ கூடாது. மேடையில் மஞ்சள் நிறத்தில் இருந்து கண்டிப்பாக விலகி இருங்கள்.
ஓடும் ரயிலில் இருக்கை கிடைக்கிற அவசரத்தில் பலர் ஏறுகிறார்கள். இதைச் செய்வது மிகவும் ஆபத்தானது. தவறும் பட்சத்தில் ரயில் தண்டவாளத்துக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுவது நிச்சயம். ஏற்கனவே இதுபோன்ற விபத்துகள் தினமும் எங்காவது நடந்து வருகிறது. இதேபோல், நேரம் முடிந்து விட்டதால் ரயில் நிற்கும் முன் நடைமேடையில் இருந்து சிலர் கீழே இறங்கி விடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானதும் கூட. ரயிலின் வேகத்தைப் பொறுத்து, சரியாக கீழே இறங்காவிட்டால், வழுக்கி காயமடையலாம். ஏறுபவர்கள் இறங்குபவர்களுடன் போட்டியிடுகிறார்கள். ஒன்றோடு ஒன்று மோதி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
ரயில்வே பிளாட்பாரத்தில் விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் எப்படி விதிக்கப்படும்?
ரயில்வே பிளாட்பாரங்களில் விதிகளை மீறினால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக ரயில்வே ஊழியர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றாவிட்டால் கடும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ரயில் நடைமேடையில் இருக்கும் போது மஞ்சள் கோட்டை கடப்பது ஆபத்தானது. இதை மீறினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். நடைமேடையில் இருப்பது அல்லது டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதற்கான அபராதம் ரூ.250 முதல் ரூ.1,000 வரை. கூடுதலாக ரயில் டிக்கெட் கட்டணமும் செலுத்த வேண்டும். ரயிலை நெருங்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் விபத்துகள் ஏற்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.
Read more : FSSAI உத்தரவை தொடர்ந்து சிவப்பு மிளகாய் பொடியை திரும்ப பெற்றது பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம்..!!