முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முருகனின் இந்த படைவீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை ஏன் தெரியுமா?… பெயரிலே பதில் இருக்கு!

07:42 AM Nov 19, 2023 IST | 1newsnationuser3
Advertisement

உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சூரசம்ஹாரம் நடைபெறுவது முக்கிய நிகழ்வு. ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது. வாருங்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். தேவர்களையும் முனிவர்களையும் சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் கொடுமைப்படுத்தினான். ஈசனிடம் பல அற்புத வரங்களை பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை ஈசன் தன் நெற்றிக்கண் சுடர் மூலம் முருகனை அவதரிக்க செய்து சூரபத்மனின் அழிவிற்கு வித்திட்டார்.

Advertisement

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் சீற்றம் முழுவதும் தணிந்த பின் அமர்ந்த மலையே திருத்தணி என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் மற்ற கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றாலும் இங்கு முருகனின் சீற்றத்தை தணிக்க புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம். சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோவில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது.

தேவர்களின் துயர் துடைத்ததோடு அடியவர்களின் கவலையையும், துன்பத்தையும் தணிக்கும் தலம் இது என்பதால் திருத்தணி என்று பெயர் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது. திருத்தணி மலை நோக்கி சென்றாலோ, திருத்தணி முருகனை நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வாங்கினாலோ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் தணிகை புராணம்.

Tags :
கந்த சஷ்டி விழாசூரசம்ஹாரம் நடப்பதில்லைதிருத்தணி
Advertisement
Next Article