நாய்கள் ஏன் இரவு நேரத்தில் மட்டும் அதிகம் குரைக்கிறது தெரியுமா..? இவ்வளவு விஷயம் இருக்கா..?
பகலில் எந்த தொல்லையும் கொடுக்காத ஒரு சில நாய்கள், இரவில் மட்டும் சில நாய்கள், தொடர்ந்து குரைத்து கொண்டிருக்கும். மேலும், வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என ஒருவரையும் விட்டுவைக்காமல் துரத்தும். இரவில் சில நேரங்களில் நாய்கள் அதிகமாக ஊளையிடுவதையும் கவனித்திருப்போம். நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாய்கள் குரைக்கும் சத்தத்தை கேட்டு திடீரென விழித்துப் பார்ப்போம். நாய்கள் ஏன் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக இரவு நேரங்களில் தெரு நாய்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் குரைப்பதையும், ஊளையிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கிறதாம். நாய் குரைப்பது கெட்ட சகுனம் என்றும் அதை மரணத்தை முன்கூட்டியே அறிவிப்பதை இது குறிக்கிறது என்று கூட சொல்லப்படுகிறது. ஆனால், இரவில் நாய்கள் குரைப்பதற்கு என்ன காரணம் என்பது சமீபத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
தெருநாய்கள் தங்களின் கூட்டத்தில் இருக்கும் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாகவே குரைக்கிறதாம். சில நேரங்களில் தொலைவான இடங்களுக்கு சென்றுவிட்டால், பாதுகாப்பான இடத்தை கண்டறிவதற்காக இப்படி குரைத்துக் கொண்டே இருக்குமாம். மேலும், சுற்றியுள்ள நாய்களுடன் உரையாடும் விதமாகவும் இப்படி குரைப்பதாகவும் சொல்லப்படுகிறது. சில இடங்களில் நாய்களுக்குள் சண்டை நடக்கும்.
இந்த சண்டை சில நாய்களுக்கு பிடிக்காது. மேலும், அந்த இடத்தில் இருக்கும் சூழலும் பிடிக்கவில்லை என்றால் நாய்கள் நள்ளிரவில் குரைத்துக் கொண்டே இருக்குமாம். தனது வேதனையை வெளிப்படுத்தும் நாய்கள் இரவில் குரைப்பதாகவும், ஊளையிடுவதாகவும் கூறப்படுகிறது. சில நாய்கள் மற்ற நாய்களை எச்சரிக்கும் விதமாகவும் குரைக்குமாம். அதாவது இந்த எல்லை தன்னுடையது என்று நிரூபிக்கும் விதமாகவும் மற்ற நாய்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று எச்சரிக்கும் விதமாகவும் நாய்கள் குரைத்துக் கொண்டு இருக்குமாம்.
சுற்றுச்சூழலில் நடக்கும் சிறிய மாற்றங்களை கூட நாய்கள் மிகவும் எளிதாக உணர்ந்து கொள்ளும். குறிப்பாக பட்டாசு வெடிப்பது, பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலி, வாகனங்களின் ஹாரன், சைரன் சத்தங்களால் நாய்கள் எரிச்சலடைய கூடுமாம். இதுவும் நாய்கள் குரைப்பதற்கு ஒரு காரணம். இவை தவிர தனது உடலில் ஏதேனும் காயம் இருந்தாலோ அல்லது வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் நாய்கள் இரவில் குரைக்கலாம். இவையும் பசி ஏற்பட்டாலும் நாய்கள் இரவில் குரைக்குமாம்.