திருமணத்தில் அக்னியை சுற்றி வலம் வருவது ஏன் தெரியுமா..? இத்தனை காரணங்கள் இருக்கிறதா..?
திருமணம் என்பது இருமனங்கள் இணையும் நிகழ்வு. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களிலும் சரி சமமாக பங்கெடுத்து வாழும் உறவு. ஒருவருக்கு ஒருவர் பாத்தியம் என்பதையே தாம்பத்திய உறவு என கூறுகிறோம். இந்த திருமணத்தின் போது பல உறவுகள் சேர்வதும், புது உறவுகள் கிடைப்பதும் என மகிழ்ச்சிகளும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்தது.
இந்து மத திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் சேர்ந்து அக்னியை சுற்றி 7 அடிகள் நடப்பார் என்பது நமக்கு தெரிந்தது தான். இதனை சமஸ்கிருதத்தில் சப்தபதி என கூறுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? கைகோர்த்து வழிநடத்தி செல்லும் மாப்பிள்ளையும் குடும்பத்தை வழிநடத்தப் போகும் பெண்ணும் இறைவனிடம் முதல் அடியில் பஞ்சமில்லாமல் வாழ வேண்டும் என்றும், இரண்டாவது அடியில் ஆரோக்கியமாக நலமுடன் வாழ வேண்டும் என்றும், மூன்றாவது அடியில் வாழ்வில் எப்போதும் நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றும், நான்காவது அடியில் செல்வத்தை அளிக்க வேண்டும் என்றும், ஐந்தாவது அடியில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைவாக கிடைக்க வேண்டும் என்றும், ஆறாவது அடியில் நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும் என்றும், ஏழாவது அடியில் தர்மங்கள் நிலைக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
இரு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது தொடர்ந்து 7 அடிகள் நடந்தால் அவர்களுக்குள் ஒருவித மனோவியல் மாற்றங்கள் நடக்கும் என்பது அறிவியல். இதனை நாம் சாலையில் நடக்கும் போது நிறைய முறை செய்திருப்போம். ஒரு அந்நியர் நம்மோடு சேர்ந்து நடக்கிறார் என்றால் இரண்டு, மூன்று அடியிலேயே அவரை முந்தி செல்வோம் அல்லது அவரை முன்விட்டு மெதுவாக செல்வோம். அப்படி இரு மனிதர்கள் சேர்ந்து நடக்கும் போது சிநேகிதம் உண்டாகும் என சாஸ்திரமும் சொல்கிறது. கணவன், மனைவி இருவரும் ஒருமனப்பட்டு வாழ வேண்டும் என்பதால் தான் இந்த ஏழு அடி அக்னியை சுற்றி வரும் முறை திருமணத்தில் உள்ளது.