மனித இனமே அழிந்துவிட்டால் பூமியை யார் ஆட்சி செய்வார் தெரியுமா..? இந்த 8 கால் உயிரினம் தானாம்..!!
மனிதர்கள் அனைவரும் அழிந்து விட்டால், பூமியை ஒரு விலங்கு ஆட்சி செய்யும் என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் ஆதிக்கம் செலுத்திய டைனோசர்கள், மிகப்பெரிய யானைகள் உள்பட பல விலங்குகள் அழிந்து விட்டன. பின்னர், பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு தற்போது மனிதன் இந்த முழு உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். இயற்கை, மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக பூமி எதிர்காலத்தில் அழியும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து ஏராளமான விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உயிரியல் வல்லுனராக பணியாற்றும் டிம் கோல்சன், மனிதர்கள் உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனால் கடலில் வாழக்கூடிய ஆக்டோபஸ் உயிரினங்கள் அடுத்த நாகரிகத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு பிறகு கடல் விலங்குகள் உலகத்தை தங்களது நாடாக மாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்தியது போன்று வருங்காலத்தில் ஆக்டோபஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் என்றும், மிக புத்திசாலித்தனமான உயிரினம் என்பதால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கக்கூடிய ஆற்றல் இதற்கு இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மனிதர்கள் முற்றிலுமாக பூமியில் இருந்து அழியும்போது நிலத்தில் வாழும் உயிரினங்களும் அழிந்து விடும் என்று கூறும் அவர், மனிதர்கள் கடலில் வேட்டையாடுவதற்கான வழிகளை கண்டுபிடித்ததுபோல், ஆக்டோபஸ்களும் நிலத்தில் வேட்டையாடுவதற்கான வழிகளை கண்டுபிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆக்டோபஸ்களிடம் உள்ள மேம்பட்ட நரம்பியல் அமைப்பு மற்ற எந்த விலங்குகளுக்கும் இல்லை என்றும் கோல்சன் எட்டுக்கால் உயிரினமான ஆக்டோபஸ் எதிர்காலத்தில் பூமியை ஆளும் என்று உறுதிபட நம்புகிறார். தற்போது இவரது ஆய்வு தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Read More : ”நீங்கள் எதையும் இலவசமாக செய்யவில்லையே”..!! ”உங்கள் கணவர் செய்தது மட்டும் சரியா”..? எகிறிய இயக்குநர்..!!