For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூடியூபரை கன்னத்தில் அறைந்த மைக் டைசன்..!! எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள்..!! குத்துச்சண்டை போட்டியில் அதிர்ச்சி தோல்வி..!!

The famous boxer Mike Tyson was defeated in the match held in the state of Texas, USA.
12:17 PM Nov 16, 2024 IST | Chella
யூடியூபரை கன்னத்தில் அறைந்த மைக் டைசன்     எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள்     குத்துச்சண்டை போட்டியில் அதிர்ச்சி தோல்வி
Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தோல்வி அடைந்தார்.

Advertisement

முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58) இதுவரை விளையாடிய 58 போட்டியில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தியுள்ளார். 6 போட்டியில் மட்டும் தோல்வியடைந்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு அவர் திரும்பியுள்ளார். முன்னதாக எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் உள்ளிட்ட பல சர்ச்சையில் சிக்கியிருந்தார் மைக் டைசன். இதனால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜேக்பால் (31) என்ற பிரபல யூடியூபர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.

இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10இல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். இந்நிலையில் இன்று (நவ.16) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், மைக் டைசன் மற்றும் யூடியூபர் ஜேக்பால் மோதினர். 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார். போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் வைரலாகி கடும் எதிர்பார்ப்பு கிளம்பியது. 20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் திறமையை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற ஜேக்பாலுக்கு இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாய் பரிசுப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 10ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

Tags :
Advertisement