முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வரலட்சுமி கணவரின் முன்னாள் மனைவி யார் தெரியுமா..? அவருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறாரா..?

In this post, we will see who is the ex-wife of Nikolai Sachthev, who Varalakshmi, daughter of actor Sarathkumar, is getting married to.
04:28 PM Jul 02, 2024 IST | Chella
Advertisement

பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளவுள்ள நிக்கோலாய் சச்தேவின் முன்னாள் மனைவி கவிதா யார் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

நடிகர் வரலட்சுமி, தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரால் ஒரு ஹீரோயினாக நிலையான இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும், வில்லி, குணச்சித்திர வேடம் என எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுக்கிறார். வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், நாளை வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் தென்னிந்திய முறைப்படி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நிக்கோலாய் சச்தேவின் முன்னாள் மனைவி கவிதா யார் என்பது பற்றியும், இருவரும் பிரிய என்ன காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நிக்கோலாய் கடந்த 2010ஆம் ஆண்டு, மிஸ்ஸஸ் கிளாட்ராக்ஸ் வெற்றியாளரான கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கவிதா ஒரு மாடல் மற்றும் 2007ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற மிஸ் குளோப் போட்டியில் பங்கேற்றார். கவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நிக்கோலாய். இவர்களுக்கு தற்போது 15 வயது நிரம்பிய ஒரு மகள் உள்ளார்.

நிக்கோலாய்க்கும் கவிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளது. இருவரும் சுமூகமாக பேசி பிரிந்த நிலையில், இவர்களின் மகள் இருவருடனும் மாறி மாறி வசித்து வருகிறார். நிக்கோலாய் வரலட்சுமியை திருமணம் செய்து கொள்வதில் அவரின் மகளுக்கும் மிகவும் சந்தோசமாம். திருமண பர்ச்சஸிலும் அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலட்சுமியும் நிக்கோலையை திருமணம் செய்து கொள்ளும் முடிவை அவசர அவசரமாக எடுக்கவில்லையாம்.

இவர்கள் இருவருமே கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்கள். எனவே, இவர்கள் இருவருக்குமே அவரவர் வாழ்க்கையில் நடந்த விஷயம் குறித்து நன்கு தெரியும். நிக்கோலாய் நண்பராக மட்டுமின்றி, சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருப்பார் என்பதால் தான் வரலட்சுமி அவரை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் இந்த திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read More : உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!

Tags :
திருமணம்முன்னாள் மனைவிவரலட்சுமி
Advertisement
Next Article