For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்..!! மாதந்தோறும் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

The Senior Citizen Savings Scheme launched by the Post Office provides a monthly income of Rs 20,500 to the elderly during their retirement.
07:57 AM Oct 27, 2024 IST | Chella
மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்     மாதந்தோறும் ரூ 20 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும்.

அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். அதுமட்டுமின்றி சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1,000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசானது 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள்.

Read More : தவெக மாநாட்டில் தொண்டர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? விஜய் எப்போது பேசுவார்..?

Tags :
Advertisement