For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது தெரியுமா..? இது தெரிஞ்சா இனி அந்த எண்ணெய்யை பயன்படுத்த மாட்டீங்க..!!

Oil is an essential ingredient in Indian kitchens. Oil is the main ingredient in most Indian food products. So let's see which oil is the best among the oils used by many people.
01:52 PM May 25, 2024 IST | Chella
சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது தெரியுமா    இது தெரிஞ்சா இனி அந்த எண்ணெய்யை பயன்படுத்த மாட்டீங்க
Advertisement

இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் என்பது இன்றியமையாத ஒன்றாகும். பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என்பதை பார்க்கலாம்.

Advertisement

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது மூளைக்கும் நன்மை பயக்கும். ஆலிவ் எண்ணெயில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது.

ஆலிவ் எண்ணெயில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது. அது இதயத்திற்கு மிகவும் நல்லது. வீக்கம், வாதம் ஆகிவற்றை சரிசெய்யவும் இது உதவுமாம். இது தவிர எள் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, எள் எண்ணெயில் ஆக்ஸிஜினேற்ற மற்றும் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன என கூறப்படுகிறது.

இதேபோல கடுகு எண்ணெயும் சமையலுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், கடுகு எண்ணெயில் எருசிக் அமிலம் உள்ளது, இதை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையலுக்கு பாமாயில், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் கொழுப்பு அதிகளவில் நிறைந்துள்ளது. இவற்றை அதிகளவு உட்கொண்டால் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது.

எனவே, ஒரே எண்ணெயை பயன்படுத்தாமல் தேவைக்கு ஏற்ப எண்ணெய்களை மாற்றி பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Read More : ’கற்களை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது’..!! பயனருக்கு AI கொடுத்த வினோத பதில்..!!

Tags :
Advertisement