10 மனைவிகள், 88 குழந்தைகள், 350 துணைவிகளை வைத்திருந்த இந்திய மன்னர் யார் தெரியுமா?
இந்திய மன்னர்கள் வீரத்திற்கும் ஆளுமைக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால், காமக்களியாட்டம் மிக்க மன்னர்களும் இந்தியாவில் இருந்தனர். அப்படி ஒருவர்தான் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா சமஸ்தான மன்னராக இருந்த மகாராஜா பூபிந்தர் சிங்.
1891ஆம் ஆண்டு புல்கியன் வம்சத்தில் பிறந்த ஜாட் சீக்கியரான பூபிந்தர் சிங், தனது 9வது வயதிலேயே பாட்டியாலா சமஸ்தானத்தின் மன்னராக அரியணையில் ஏறினார். மிகவும் சாப்பாட்டு பிரியரான அவர், தேநீர் நேர சிற்றுண்டியாக 9 கிலோ உணவையோ அல்லது 2 கோழிகளையோ முழுதாக சாப்பிடுவாராம். ஏனெனில் அவரது பசி என்பது, உணவுக்கெல்லாம் அப்பாற்பட்டது எனக் கூறுவர்.
சாப்பாட்டில் மட்டுமல்லாமல், கட்டில் சுகத்திற்கும் மிகவும் அடிமையான மகாராஜா பூபிந்தர் சிங், தனது வாழ்நாளில் 10 பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் மூலம் 88 குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இத்தனை பெண்களை திருமணம் செய்திருந்தாலும், அவரது காமக்களியாட்டத்திற்காக, 350 பெண்களையும் அவர் வைத்திருந்துள்ளார். ஆனாலும், அவருக்கு ராஜமாதா விமலா கவுர் தான் மிகவும் பிடித்தவர் என்பதால், அடிக்கடி அவருடன் வெளிநாட்டிற்கு சென்று சுற்றுப் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
இருந்தாலும், தனது 350 துணைவியர் மீது தனிக்கவனம் செலுத்திவந்த பூபிந்தர் சிங், நகை தயாரிப்பாளர்கள், சிகையலங்கார நிபுணர்கள், வாசனை திரவியம் தயாரிப்பவர்களை வேலைக்கு அமர்த்தி, துணைவியர் எப்போதும் அழகாக இருக்கும் வகையில் பார்த்து வந்துள்ளார். மேலும், பிரான்சில் இருந்து பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழுவை நியமித்து, தனது விருப்பப்படி, துணைவியர்களின் தோற்றத்தை மாற்றினார்.
அத்துடன், கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்ட பூபிந்தர் சிங், சொந்தமான தனி விமானத்தை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். இத்தனை சுகபோகமாக வாழ்ந்தாலும், அவர் தனது 46ஆவது வயதிலேயே இயற்கை மரணம் எய்துவிட்டார்.
Read more ; ஓடும் கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன் தெரியுமா? – காரணம் இவைதான்..!