இந்திய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் உணவுகள் எது தெரியுமா..? அட இதுவா..?
அதிகம் வெறுக்கப்படும் இந்திய உணவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரஸ்யமான உணவு வகைகள் குறித்து தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் உள்ளது போலவே ஊருக்கு ஊர், மாநிலத்திற்கு மாநிலம் உணவு முறைகளும் வெவ்வேறாக உள்ளது. அதில் பலருக்கும் பிடித்த உணவுகளும், பிடிக்காத உணவுகளும் உண்டு. தமிழ்நாட்டில் உப்புமா என்றாலே பலருக்கு கொஞ்சம் அலர்ஜி. ஆனால், பிரியாணிக்கு எப்போதுமே செம கிராக்கி. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பு இந்தியாவின் மிக விரும்பப்படும் உணவுகள், அதிகம் வெறுக்கப்படும் உணவுகள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் பலரும் வெறுக்கும் உப்புமா 10-வது இடத்தில் உள்ளது. உப்புமாவையே மிஞ்சும் வெறுக்கப்படும் உணவுகள் வட இந்தியாவில் உள்ளது. அப்படி வெறுக்கப்படும் உணவாக முதல் இடத்தை பெற்றுள்ளது ஜல் ஜீரா எனப்படும் பானம். அதனைத் தொடர்ந்து கஜக், தேங்காய் சாதம், பண்டா பட், அலூ பய்ங்கன், தண்டை, அச்சப்பம், மிர்ச்சி கா சலன், மல்புவா உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
அதுபோல மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் முதல் இடத்தில் மேங்கோ லஸ்ஸி உள்ளது. அதைத்தொடர்ந்து பட்டர் நான், ஹைதராபாத் பிரியாணி, தந்தூரி சிக்கன் என பல உணவு வகைகள் இடம்பிடித்துள்ளன.
Read More : பெற்றோர்களே உஷார்..!! கோமா, உயிரிழப்பை ஏற்படுத்தும் ’சந்திபுரா’ வைரஸ்..!! 6 குழந்தைகள் பலி..!!