இந்தியாவில் எந்தெந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா..? அட இந்த இறைச்சிக்கும் தடையா..?
இந்தியாவில் விதவிதமான கலாச்சாரங்கள் மற்றும் உணவு பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு உணவு குறித்த பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விதிகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் பல்வேறு விதமான உணவுகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு அனுபவிக்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களுக்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) குறிப்பிட்ட சில உணவுகளை இந்தியாவில் தடை செய்துள்ளது. அதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சீன பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் : சீன பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இந்தியாவில் கடந்த 2008 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பாதுகாப்பு ஊழல்கள் மற்றும் கெட்டுப் போகும் பிரச்சனைகள் அடிக்கடி சீனாவில் எழுந்ததை தொடர்ந்து இதற்கு தடை விதிக்கப்பட்டது. சீன டைரி ப்ராடக்டுகளில் புரோட்டின் அளவுகளை செயற்கையான முறையில் ஊக்குவிப்பதற்காக மெலாமைன் என்ற நச்சு கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் புரோமேட் : பிரெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவின் நெகிழ்வுத் தன்மை மற்றும் அதன் பருமனை அதிகரிப்பதற்காக உணவு கூடுதலாக உபயோகிக்கப்படும் பொட்டாசியம் புரோமேட் புற்றுநோய் பண்புகளை வெளிப்படுத்துவதால் இது 2016இல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பொட்டாசியம் புரோமேட் ஆனது தைராய்டு, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.
பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்கும் ஏஜெண்டுகள் : கால்சியம் கார்பைடு மற்றும் எத்திலின் அமிலம் போன்ற கெமிக்கல் ஏஜெண்டுகள் பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இது பல்வேறு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும், பாதுகாப்பு அபாயங்களையும் உண்டாக்குவதால் இந்தியாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
சீன பூண்டு : சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூண்டுகளில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்ததால், 2019ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
ஃபோ கிராஸ் (Foie Gras) : வாத்துகளின் கல்லீரல்களை பெரிதாக்குவதற்காக ஃபோ கிராஸ் வலுக்கட்டாயமாக அவற்றிற்கு தீனியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இது முற்றிலும் கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற செயல் என்று விலங்குகள் நல வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்ததை அடுத்து இது இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
ரெட் புல் : ரெட் புல் என்ற பிரபலமான ஆற்றல் பானத்தில் காஃபின், டவுரின் மற்றும் பிற தூண்டுதல்கள் இருப்பதன் காரணமாக இது மனிதர்களுக்கு சாத்தியமான ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தலாம். காஃபின் பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், இந்த பானத்தை அதிகப்படியாக பருகுவதால் அதிகரித்த இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீர்ச்சத்து இழப்பு ஏற்படலாம். இதனால் இந்தியாவில் இது 2006இல் தடை செய்யப்பட்டது.
முயல் கறி : விலங்கு நலன் கருதி மற்றும் ஒரு சில மத சார்ந்த காரணங்களுக்காகவும் இந்தியாவில் முதன்மையாக முயல் கறி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தொகையாக அமையும் இந்துக்கள் முயலை புனித விலங்காக கருதுகின்றனர். ஆகவே, விலங்கு நலன் மற்றும் மதசார்ந்த நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து இந்தியாவில் முயல் கறி தடை செய்யப்பட்டுள்ளது.
சாஸாஃபிராஸ் எண்ணெய் (Sassafras oil) : சாஸாஃபிராஸ் எண்ணெய்யில் உள்ள அதிக ஈருசிசிக் அமிலம் காரணமாக இது இதய நோய் உட்பட பல்வேறு விதமான அபாயங்களை மனிதர்களில் ஏற்படுத்தலாம். எண்ணெய்யில் ஈருசிசிக் அமில அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை காட்டிலும் அதிகப்படியாக பயன்படுத்தப்படுவதால், இது இந்தியாவில் 2003இல் தடை செய்யப்பட்டது.
Read More : மனித இனம் அழியும் அபாயம்!… நிலவில் 275 மொழிகளை பாதுகாக்க விஞ்ஞானிகள் திட்டம்!