உலகின் வினோதமான சட்டங்கள் பின்பற்றப்படும் நாடுகள் பற்றி தெரியுமா?
ஹாங்காங் நாட்டில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் கணவனை மனைவி தன் கைகளால் கொல்லலாம் என்ற வினோத சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் இயற்றப்பட்டுள்ள வினோதமான சட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.
நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்காமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு நாட்டையும், நாட்டின் குடிமக்களையும் வழிநடத்த சட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாட்டில் விதிக்கப்படும் பல்வேறு சட்டங்கள் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்து. அந்தவகையில் உலகின் பல நாடுகளின் இயற்றப்பட்டுள்ள வித்தியாசமான சட்டங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மென்று சுவைக்கும் சுவிங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தனது நாட்டை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதேபோல், சமோனா என்கிற நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறந்தால், கணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார் என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்த குற்றத்தை செய்து பலரும் சிறைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மக்கள் ரப்பர் காலணிகளை பயன்படுத்தும் இத்தாலி நாட்டில், கடற்கரைக்கு காலணிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலும் மக்கள் ரப்பர் காலணிகள் அணிந்தே வருவார்கள். இங்கு காலணிகள் அணிவது பிரச்னை இல்லை அதனை கடல் நீரில் நனைப்பதுதான் பிரச்னை. நனைந்த பின்னர் வருகின்ற சத்தம் பலருக்கும் பிடிக்காது என்ற காரணத்தினால் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தனது மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக மிலன் நாட்டில், மக்கள் எந்நேரமும் முகத்தில் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எந்தவொரு கவலையோ அல்லது சிரமங்கள் இருந்தாலும் சிரித்து கொண்டே இருக்க வேண்டுமாம். இங்கு இரங்கல் வீட்டிலும் மக்கள் புன்னகையுடன் தான் இருப்பார்கள்… இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ளாடை அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அதிகபட்சமான தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது.
டென்மார்க் நாட்டில் பெர்சனல் பெயர்’ என ஒரு சட்டம் அமலில் உள்ளது.இந்த சட்டத்தின்படி எவரும் குழந்தைகளுக்கு பெயர் வைக்கமுடியாது.அரசு தருகின்ற பட்டியலில் இருந்துதான் பெற்றோர் பெயரை தேர்ந்தேடுத்து வைக்க வேண்டும்.ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு 10 மணிக்குமேல் கழிவறையில் ஃபிளஷ் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆர்கன்சஸ் என்ற நாட்டில் கணவன் மனைவியை வீட்டில் அடிக்கவோ அல்லது தாக்கவோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் விளைச்சல் குறைவு என்பதால், அங்கு குறிப்பிட்ட அளவுக்குமேல் உருளைக்கிழங்குகளை சாலைகளில் எடுத்து செல்ல முடியாது