'சகோதரர்கள் இறக்க வேண்டும் என்று சாபம் விடும் சகோதரிகள்' இந்த விசித்திர கிராமம் எங்க இருக்கு தெரியுமா?
அண்ணன் – தங்கை உறவு என்பது எப்போதுமே ஒரு தனித்துவமானது.. தாய் தந்தைக்கு அடுத்த படியாக அதிக பிணைப்பு ஏற்படுவது சகோதர – சகோதரி உறவில் தான்.. பெற்றோரிடம் கூட சொல்ல தயங்கும் விஷயங்களை அண்ணனுடனோ அல்லது தங்கை உடனோ தான் பகிர்ந்து கொள்கின்றனர்.. இந்த உறவை சிறப்பிக்கும் விதமாகவே ரக்ஷ பந்தன் கொண்டாடப்படுகிறது.. ஆனால், சகோதரிகள் தங்கள் சகோதரன் இறக்க வேண்டும் என்று சபிக்கும் இடமும் உள்ளது.
ஆம்.. சத்தீஸ்கரின் ஜஷ்பூரில் உள்ள ஒரு சமூகத்தில் இந்த நூதன பழக்கம் பின்பற்றப்படுகிறது.. சகோதரிகள் முதலில் தங்கள் சகோதரனை இறக்கும்படி சபிப்பது இங்கே ஒரு வழக்கம். இதற்குப் பிறகு, அந்த சகோதரி தனது நாக்கை ஒரு முள்ளால் குத்தி பரிகாரம் செய்ய வேண்டுமாம்.. இதற்குப் பிறகு, ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சகோதரர்களின் நெற்றியில் திலகம் பூசி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்த்துகிறார்கள். இந்த பாரம்பரியம் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது.
சகோதரரின் பாதுகாப்பிற்காகவும், யமதர்ம ராஜாவின் கவலையைக் குறைக்கவும் என்று நம்பப்படுகிறது. யமதர்மராஜா பூமிக்கு வந்தவுடன், சகோதரியால் சபிக்கப்படாத சகோதரனை கொல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் தங்கள் சகோதரனை சபிக்கிறார்கள். சகோதரனை பாதுகாக்கவே அவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது..