'யாராலும் திறக்க முடியாத மர்மக் கதவு' எங்க இருக்கு தெரியுமா??
உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன.. அந்த இடங்களை பற்றி பல்வேறு ஆச்சர்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. அந்த வகையில் இன்று ஒரு மர்மமான கதவைப் பற்றி பார்க்கலாம். இந்த மர்மக் கதவு பீகாரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராஜ்கிரில் உள்ள ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. இன்று வரை இந்தக் கதவை யாராலும் திறக்க முடியவில்லை.
இந்தக் கதவுக்குப் பின்னால் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் முறை முயன்றும் இன்று வரை யாராலும் திறக்க முடியவில்லை. ஹரியங்கா வம்சத்தை நிறுவிய பிம்பிசாரா தங்கம் மற்றும் வெள்ளியை விரும்பினார். இதனால், நகைகளை சேகரித்து வந்தார் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..
இந்த ராஜ்கிர் குகையில் பிம்பிசாரரின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் மனைவி அந்த பொக்கிஷத்தை மறைத்து வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இன்றுவரை இந்தப் புதையலை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தக் குகைக்குச் செல்ல ஆங்கிலேயர்கள் பலமுறை முயன்றும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ராஜ்கிர் குகை பிம்பிசாரரின் மனைவியால் கட்டப்பட்டது. இங்குள்ள தங்க புதைய இன்றும் மர்மமாகவே உள்ளது. இந்த மர்மமான குகையைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
Read more ; நீங்கள் ஓட்டும் கார் திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையா? இதை செய்தால் போதும்!!