முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் இதுதான்..! ஆனா கல்கி 2898 ஏடி, கோட் இல்ல! Full List இதோ..

With just a few days left until the end of 2024, the company has shared a list of the ‘most searched Movies’ on Google this year.
03:23 PM Dec 11, 2024 IST | Rupa
Advertisement

2024-ம் ஆண்டு முடிவடடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு கூகுளில் ‘அதிகம் தேடப்பட்ட படங்களின்’ பட்டியலை அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு, கூகுள் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் கல்கி 2898 ஏடி அல்லது கோட் படமோ முதலிடத்தில் இல்லை. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பட்டையை கிளப்பிய ஸ்த்ரீ 2 படம் முதலிடத்தில் உள்ளது..

Advertisement

ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தான் இந்த ஆண்டில் ஹிந்தியில் அதிக வசூல் செய்த படமாகவும் உள்ளது. வெறும் 60 கோடி பட்ஜெட்டில் உருவான ஸ்த்ரீ 2 படம் உலகளவில் ரூ.778 கோடி வசூல் செய்தது.

இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி, ஹனுமான் போன்ற படங்களை ஸ்த்ரீ 2 படம் முறியடித்துள்ளது. பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடித்த கல்கி 2898 ஏடி படம் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.. இந்த படமும் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகும். நாக் அஸ்வின் இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் 1,100 கோடி ரூபாய் வசூலித்தது.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் 12th Fail படம் உள்ளது. இத்திரைப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்தார் மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருதுகள் சீசனில் அவர் அனைத்து விருதுகளையும் வென்றார். ஆஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமான லாப்பட்டா லேடீஸ் மற்றும் மலையாளப் படங்களான மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் போன்ற படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் படங்களை பொறுத்தவரை விஜய்யின் கோட், விஜய் சேதுபதியின் மகாராஜா ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.

2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்ட்

இதற்கிடையில், சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி தொடர் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நிகச்சியாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Netflix இல் வெளியிடப்பட்ட இந்தத் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.. இந்தத் தொடரில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரில் ஃபர்தீன் கான் மற்றும் சேகர் சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அமேசான் பிரைம் வீடியோவின் மிர்சாபூர், தென் கொரிய நிகழ்ச்சியான குயின் ஆஃப் டியர்ஸ் மற்றும் சல்மான் கானின் பிக் பாஸ் 18 போன்ற ஹிட் ஷோக்களும் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

2024ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளின் பட்டியல்

Read More : நடிகர் மோகன் பாபுவுக்கு என்ன ஆச்சு..? திடீரென மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!

Advertisement
Next Article