74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர்... பாக்ஸ் ஆஃபிஸ் கிங்.. ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் இந்து தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. தனது ஈடு இணையற்ற ஸ்டலை மற்றும் நடிப்பு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினிகாந்த்.. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் ரஜினிகாந்த் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராவகவும் வலம் வருகிறார். ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
ரஜினியின் ஆரம்ப வாழ்க்கை
டிசம்பர் 12, 1950 அன்று பெங்களூரில் சிவாஜி ராவ் கெய்க்வாட் பிறந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன், பெங்களூரு போக்குவரத்து துறையில் பேருந்து நடத்துனராகப் பணிபுரிந்தார். ஆரம்ப நாட்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியை பார்த்த அவரின் நண்பர் ஒருவர் அவரை சென்னைக்கு செல்லும் படி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி சென்னை வந்த ரஜினி ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். பின்னர் தனது நண்பரின் உதவியால் சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்த
திரையில் அறிமுகம்
ரஜினிகாந்தின் திரையுலகப் பிரவேசம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவர் 1973 இல் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார், அங்கு தனது நடிப்பு திறமை மெருகூட்டினார். 1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.
சிவாஜி ராவ்க்கு வழிகாட்டியாக இருந்த கே.பாலச்சந்தர் தான் அவருக்கு ரஜினிகாந்த் என்ற திரைப் பெயரை வழங்கினார். ஆரம்பத்தில் வில்லன், நெகட்டிவ் ரோல்களில் அதிகமாக நடித்து வந்தார் ரஜினி. அவரின் தனித்துவமான ஸ்டைல், நடிப்பு ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஒரு சூப்பர் ஸ்டாரின் உதயம்
1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம் ரஜினிகாந்த் முதலில் ஹீரோவாக நடித்த படம். அதுவரை நெகட்டிவ் ரோலில் நடித்த அவர் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்றார். அவரது தனித்துவமான நடை, சிகரெட்டைப் புரட்டுவது மற்றும் அவரது விறுவிறுப்பான நடை உட்பட, அவரின் சிக்னேச்சர் ஸ்டைலாக மாறியது.
முள்ளும் மலரும், ஆறிலிருந்து அருபது வரை, மற்றும் மூன்று முகம் போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரஜினியின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 80, 90களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
பாக்ஸ் ஆபீஸ் கிங் :
ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்கள் மாஸ் கமர்ஷியல் படங்களாகவே இருந்தன. மேலும் அவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு பெயர் பெற்றவை. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காவும் அழைக்கப்படுகிறார்.
ரஜினியின் பாட்ஷா படம் ஒரு கல்ட் கிளாசிக் படமாக மாறியது. தொடர்ந்து முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி என பல ஹிட் படங்களை கொடுத்தார். 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் ரஜினியின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அந்த நேரத்தில் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவரை மாற்றியது. எந்திரன், அதன் தொடர்ச்சியான 2.0 (2018) அவரது பன்முகத் திறனை வெளிப்படுத்தியது. பாக்ஸ் ஆபிஸில் ரஜினியை ஒரு வசூல் மன்னனாகவும் நிலை நிறுத்தியது. இடை இடையே பல தோல்விகளை சந்தித்தாலும் இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவே தன்னை நிலை நிறுத்தி உள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் புகழ் இந்தியாவில் மட்டும் இல்லை. ஜப்பானில் அவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். ஜப்பானில் ரஜினியின் முத்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவரது செல்வாக்கு உலகம் முழுவதும் பரவியுள்ளது, ரசிகர்கள் அவரது பிறந்தநாளையும் திரைப்பட வெளியீடுகளையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை
சூப்பர் ஸ்டார் என்ற போதிலும், ரஜினிகாந்த் ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் ஆன்மீக வாழ்க்கையை நடத்துகிறார். அவர் 1981 இல் லதா ரங்காச்சாரியை மணந்தார், மேலும் இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ரஜினியின் மகள்களும் சில படங்களை இயக்கி உள்ளனர்.
விருதுகள்
ரஜினிகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளான, பத்ம பூஷன் (2000) மற்றும் பத்ம விபூஷன் (2016) ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
Read More : அனுமதியின்றி 3 வினாடி வீடியோ..!! நயன்தாரா மீது கேஸ் போட்ட தனுஷ்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!