வீட்டுக் கடன் EMI செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? முழு விவரம் இதோ!!
வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்தாவிட்டால் வங்கி தரப்பில் இருப்பில் இருந்து எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சொந்த வீடு வாங்க இன்று வங்கிகளில் மிகவும் எளிதாகக் கடன் கிடைத்தாலும், 15-30 வருடம் என நீண்ட காலக் கடனாக உள்ளது. நம்முடைய வாழ்க்கை என்பது எப்போது ஓரே நிலையில் இருக்காது கட்டாயம் ஏற்ற இறக்கம் இருக்கும். சொந்த வீடு வாங்கும் போது கடன் இல்லாமல் வாங்குவோர் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் மிகவும் குறைவு. அப்படிப் பணம் வைத்திருந்தாலும் வருமான வரி சலுகைக்காகக் குறிப்பிட்ட தொகையாவது வங்கி கடனாக வாங்கப்படுகிறது.
வீட்டுக் கடன் இப்படியிருக்கையில் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்தாவிட்டால் வங்கி தரப்பில் இருப்பில் இருந்து எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஈஎம்ஐ தொகை முதல் முறை வீட்டுக் கடன் ஈஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் தரப்பில் இருந்து எஸ்எம்எஸ், ஈமெயில், மொபைல் அழைப்புகள் மூலம் நினைவூட்டுவார்கள். இதை மட்டும் அல்லாமல் இதற்குச் சில கட்டணமும் கூடுதலாகச் செலுத்த வேண்டும். இப்படித் தாமதமாகச் செலுத்தப்படும் ஈஎம்ஐ தொகைக்குத் தாமதம் கட்டணம் அல்லது அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஓவர்டியூ தொகையில் 1 முதல் 2 சதவீத தொகையாக இருக்கும். இதை ஈஎம்ஐ தவணை உடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
வாரக் கடனாக அறிவிப்பு 2-வது முறை ஈஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கியில் இருந்து கடிதம் வரலாம், அல்லது விரைவாகச் செலுத்தச் சொல்லி எச்சரிக்கை வரலாம். 3-வது முறையும் செலுத்தவில்லையெனில் வங்கி தரப்பில் இருந்து வீட்டுக் கடனை NPA அதாவது வாரக் கடனாக அறிவித்துவிடும்.
SARFAESI 2002 சட்டம் இதைத் தொடர்ந்து வங்கி தரப்பு கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தாதவர்கள் மீது SARFAESI 2002 சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் துவங்கும். வங்கிகள் தங்களது பணத்தை வசூலிக்க 60 நாட்களுக்குள் பணத்தைச் செலுத்த லீகல் நோட்டீஸ் அனுப்பும்.
சொத்து கைப்பற்றல் இந்த 60 நாட்களுக்குள் வீட்டுக் கடனுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தாத பட்சத்தில் வங்கி தரப்பில் இருந்து ஒரே ஒரு நோட்டீஸ் கொடுத்துவிட்டு சொத்தை கைப்பற்றும், SARFAESI 2002 சட்டம் மூலம் நீதிமன்றத்திற்குச் செல்லாமலேயே சொத்துக்களைப் பறிமுதல் செய்யமுடியும். இது ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை கடுமையாகப் பாதிக்கும்.
Read more ; ‘திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம்’ ஆனா ஒரு கண்டிஷன்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?