முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உணவில் வெங்காயம், பூண்டுகளை சேர்க்காத ராஜ வம்சத்தினர்!… என்ன காரணம் தெரியுமா?

08:04 AM Apr 10, 2024 IST | Kokila
Advertisement

Royal Family: ராஜ குடும்பத்தினர் உணவில் வெங்காயம், பூண்டுகளை சேர்க்கமாட்டார்களாம். ஏனென்றால், ஏப்பம் வந்துவிட கூடாது என்பதற்காக இவைகளை தவிர்ப்பதாக சமையல் கலை நிபுணர் கூறியுள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ராணி கமீலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம், எந்த உணவுகளை ராஜ குடும்பத்தினர் உண்ண தடை உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமீலா, ராஜ குடும்பத்தினர் விருந்தினர்களுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளதால், அதன் வாசனை வீசவோ அல்லது ஏப்பம் வந்துவிடவோ கூடாது என்பதால் பூண்டைத் தவிர்ப்பதாக கூறியுள்ளார்.

அதேபோல, ராஜ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, கடல் உணவுகள், குறிப்பாக, shellfish என்னும் சிப்பிவகை உணவுகள், இறால் போன்றவற்றை தவிர்த்துவிடுவார்களாம். அதற்குக் காரணம், இந்த சிப்பி வகை உணவுகள் food poisoning என்னும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். வெளிநாட்டுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்த நேரத்தில் food poisoning பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆவது? அதனால்தான் ராஜ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது இவ்வகை கடல் உணவுகளை தவிர்த்துவிடுவார்கள் என்கிறார் மற்றொரு சமையல் கலை நிபுணரான Grant Harrold.

Foie gras என்பது, வாத்துக்களுக்கு, குழாய் மூலம் அதிக அளவு மக்காச்சோளத்தை உணவாக கொடுத்து, (அல்லது வலுக்கட்டாயமாக திணித்து என்றும் சொல்லலாம்) வாத்துக்களின் ஈரலை சீக்கிரமாக கொழுக்கச் செய்து, அந்த ஈரலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவாகும். ஆகவே, ராஜ குடும்ப விருந்துகளில் இந்த உணவை பரிமாற மன்னர் சார்லஸ் தடை வித்துள்ளார். அதற்காக விலங்குகள் நல அமைப்பான PETA, மன்னரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?… செருப்பு கூட காரணமாகலாம்!… இதை கவனியுங்கள்!

Advertisement
Next Article