கேரட்டை பச்சையாக கடித்து சாப்பிடுவதால் உங்க கல்லீரலுக்கு என்ன நன்மை தெரியுமா.?
கேரட், காய்கறிகளில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களையும் வைட்டமின்களையும் உள்ளடக்கியது. இவை நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு கேன்சர் நோய் தாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. இதய நோய்களுக்கு எதிராக போராடும் தன்மையும் கேரட்டில் உள்ளது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்யவும் வைட்டமின்களும் கேரட்டில் உள்ளது.
இவற்றில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின், ஆன்ட்டி
இன்ஃப்லமெட்ரி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளைக் கொண்டது. ரத்த உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிட்டு வரும்போது நமது கல்லீரலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்களும் அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த கூடியதாகும்.
கல்லீரலின் ஆரோக்கியம் கண்களோடு தொடர்புடையது. கல்லீரல் வீக்கம் இருந்தால் அது கண் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு கேரட் ஒரு சிறந்த தீர்வு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பச்சை கேரட்டை கடித்து சாப்பிட வேண்டும். இது மருத்துவர்களின் உறுப்புகள் கடிகாரத்தின் மூலமாக தெரிவிக்கின்றனர்.
அதாவது இரவு ஒரு மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை கல்லீரலுக்கான ஓய்வு நேரம். இந்த நேரத்திற்கு முன்பாக பச்சை கேரட் கடித்து சாப்பிட்டு அந்த உணவு வளர்ச்சிதை மாற்றம் அடைந்து இருந்தால் அதை கல்லீரல் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் கல்லீரல் வீக்கம் குறைவதோடு கண்பார்வையும் வளர்ச்சி அடையும்.