தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் வளர்வது எவ்வளவு அவசியம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
பழங்காலத்தில் பெரும்பாலும் அனைவருமே கூட்டுக் குடும்பங்களாக வசித்து வந்தனர். ஆனால், தற்போது பலர் கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என்று ஒரு சிறிய குடும்பத்தில் வாழ்வதை விரும்புகின்றனர். இதனால், பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு முழுமையாக கிடைக்காமல் போகிறது. ஆகவே, இந்த பதிவில் பேரப்பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியின் முக்கியத்துவம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு ஒரு சிறிய லைப்ரரி போல தான். அவர்களுடைய சொந்த அனுபவங்களில் இருந்து பல்வேறு விதமான கதைகளை கொண்டிருப்பார்கள். அவர்கள் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு இடையே ஒரு பாலம் போல செயல்படுவார்கள். அவர்களுடைய கதைகள் மூலமாக பேரப்பிள்ளைகளுக்கு மதிப்பு மிகுந்த வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருவார்கள். தாத்தா பாட்டிகள் எப்போதும் பேரப்பிள்ளைகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் குழந்தைகளை அன்பாகவும், அரவணைப்பாகவும் பாதுகாப்பார்கள். தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளுக்கு அன்பையும் புரிதலையும் அள்ளி அள்ளி வழங்கக் கூடியவர்கள்.
குடும்ப வரலாற்றை நன்கு அறிந்த தாத்தா - பாட்டிகள் தலைமுறைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை கதைகள் மூலமாக நிரப்பக் கூடியவர்கள். இதன் மூலம் பிள்ளைகள் அவர்களுடைய வேர்கள், பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொள்வார்கள். பிரச்சனைகளில் இருந்து மீள்வது, வலிமை மற்றும் விடாமுயற்சி போன்றவற்றை உருவகப்படுத்தக் கூடியவர்கள் தாத்தா பாட்டிகள். இவர்களுடைய பயணம் பேரப்பிள்ளைகளுக்கு ஒரு சாலை வரைபடம் போல திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும், அவற்றை எப்படி சமாளிப்பது, கனவுகளை எப்படி அடைவது போன்றவற்றை கற்றுக் கொள்வதற்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள்.
இன்றைய நவீன உலகில் பெற்றோர்களுக்கு பிள்ளைகளுடன் போதுமான அளவு நேரத்தை செலவிட முடியவில்லை. அந்த குறையை தாத்தா பாட்டிகள் தீர்த்து வைப்பார்கள். பேரப்பிள்ளைகளுடன் வாக்கிங் செல்வது, அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பது, பாரம்பரிய உணவுகளை ஒன்றாக சமைத்து சாப்பிடுவது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது மற்றும் பல போன்ற மறக்க முடியாத நினைவுகளை தரக்கூடியவர்கள் தாத்தா பாட்டிகள். விளையாட்டாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி கடினமான சூழ்நிலைகளில் தாத்தா பாட்டிகள் எப்போதுமே அவர்களுடைய பேரப்பிள்ளைகளுக்காக இருப்பார்கள். பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து வாழ்க்கையின் மேடு பள்ளங்களை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்கு வீட்டில் நிச்சயமாக தாத்தா பாட்டிகள் அவசியம்.
எல்லாவற்றிற்கும் மேலாக தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகள் மீது அளவு கடந்த அன்பை செலுத்தக் கூடியவர்கள். இது குழந்தைகளின் நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம். இப்போது சொல்லுங்கள். பல்வேறு விதமான அறநெறிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை தரவல்ல தாத்தா பாட்டிகளை நாம் ஏன் மிஸ் செய்ய வேண்டும்..?
Read More : இளைஞர்களே உஷார்..!! அச்சுறுத்தும் கொழுப்பு கல்லீரல்..!! ஆரம்பித்திலேயே சரிசெய்ய சூப்பர் வழிமுறைகள்..!!