'டெய்லி 6 ரூபாய் போட்டால் போதும்.. ஒரு லட்சம் வரை கவரேஜ்..!' குழந்தைகளுக்கான இந்த திட்டம் பற்றி தெரியுமா?
இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் இந்த ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் தினசரி வெறும் 6 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒரு லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.
வீட்டில் குழந்தை பிறந்த உடனே பலரும் அவற்றின் எதிர்காலம் குறித்து சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் அதற்காக முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு என்றால் பொன்மகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு என்றால் பொன்மகன் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன. அந்த வரிசையில் தான் இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பலன்கள்:
எதிர்பாராத விதமாக உங்கள் குழந்தைகள் உயிரிழக்கும் பட்சத்தில், குடும்பங்களில பொருளாதார நிலை பாதிக்காமல் பல் ஜீவன் பீமா யோஜனா திட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. குழந்தையின் பெயரில் துவங்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் தினசரி 6 ரூபாய் டெபாசிட் செய்து வர வேண்டும். பிறகு எதிர்பாராத உயிரிழப்புகளின்போது ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்திலிருந்து இழப்பிட்டுத் தொகை பெற முடியும். குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மருத்துவ செலவுகள், படிப்பு செலவுகள் ஆகியவற்றை முடிந்த அளவு சரி செய்வதற்கு இந்த திட்டம் உதவுகிறது.
பல் ஜீவன் பீமா யோஜனாவின் மற்றொரு பயன் என்னவெனில் சேமிப்பு மற்றும் பொருளாதார நிலையை சமாளிப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். தினசரி செய்யப்படும் இந்த 6 ரூபாய் சேமிப்புகளின் மூலம் ஒழுக்கத்தையும், பொருளாதார நிலையில் திட்டமிடுதலின் அவசியத்தையும் மிக இளம் வயதிலேயே குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் யாரேனும் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகி அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைகளின் பெயர், வயது, முகவரி ஆகியவற்றை பூர்த்தி செய்த பிறகு வீட்டு முகவரி மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்திற்கு 8 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் பெயரில் விண்ணப்பிக்கலாம். Bal Jeevan Bima திட்டத்தின் மூலம் அந்த குழந்தையின் 18ஆம் அகவை வரை தான், நீங்கள் பயனடைய முடியும். 18 வயதை கடந்த பின்பு, உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், இத்திட்டம் செல்லுபடி ஆகாது. உங்களுக்கு எந்த வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் :
இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ், போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் என்று இரு தனித்தனி திட்டங்களில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம். உங்கள் குழந்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தால், 20 வயதிற்கு மேல் இருந்து, நீங்கள் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருந்தால், உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ. 1,000 ரூபாய்க்கு, வருடத்திற்கு ரூ. 48 ரூபாய் போனஸாக வழங்கப்படும்.
அதேபோல, நீங்கள் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருந்தால், உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ. 1,000 ரூபாய்க்கு, ரூ. 52 ரூபாய் போனஸ் வழங்கப்படும். இந்தத் தொகையை நீங்கள், முதிர்வு காலத்தின் போது மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.
Read More ; Workplace செயலியை மொத்தமா மூடும் மெட்டா நிறுவனம்..!