For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏரிக்குள் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள்!! இந்தியாவின் இந்த 'மர்ம ஏரி' பற்றி உங்களுக்கு தெரியுமா?

Only a few people know about the mysterious lake.. No one who has gone to this lake has ever returned. The lake is near the border of India and Myanmar. This lake is known as the mysterious lake.
07:00 PM Jun 11, 2024 IST | Mari Thangam
ஏரிக்குள் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள்   இந்தியாவின் இந்த  மர்ம ஏரி  பற்றி உங்களுக்கு தெரியுமா
Advertisement

நாம் அனைவரும் பல ஏரிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்த மர்ம ஏரி பற்றி ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும்.. இந்த ஏரிக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததே இல்லையாம். இந்த ஏரி இந்தியா மற்றும் மியான்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ஏரி மர்மமான ஏரி என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

நவாங் யாங் என்று அழைக்கப்படும் இந்த ஏரி அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.. இரண்டாம் உலகப் போரின்போது, ​​இந்த ஏரிக்கு அருகில் அமெரிக்க விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அதன் பிறகு விமானம் மற்றும் அதில் இருந்த விமானிகள் உட்பட அனைவரும் மிகவும் மர்மமான முறையில் மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.. இதே போல் 2-ம் உலகப் போர் முடிந்த பிறகு ஜப்பானிய வீரர்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களும் இந்த ஏரிக்கு அருகே வந்த போது வழிதவறி மறைந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

ஆனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நம்பிக்கை வேறு விதமாக உள்ளது.. பல வருடங்களுக்கு முன்பு ஒரு கிராமவாசி ஒரு பெரிய மீனைப் பிடித்தாராம்.. பின்னர் அவர் முழு கிராமத்தையும் விருந்துக்கு அழைத்தாராம். ஆனால் ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தியை விட்டுவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த ஏரியை பாதுகாக்கும் நபர், அந்த பாட்டி மற்றும் பேத்தியை மட்டும் கிராமத்தை விட்டு வெளியேறும்படி கூறினாராம்.. அடுத்த நாள் கிராமம் முழுவதும் ஏரியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. ஏரியின் மர்மத்தைக் கண்டறிய அனைத்து முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதுகுறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.

Read more ; வீட்டுவசதி இல்லாத நபர்களுக்கு புதிய வீடுகள்…! ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு…!

Tags :
Advertisement