விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் இந்த கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா..? உடனே வாங்கிடுங்க..!!
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் வழங்கும் வழக்கமான கடன்களில் அதிக வட்டி விகிதங்களில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு கிடைக்கும்.
அதாவது, கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதம் 2 முதல் 4 சதவீதம் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும். கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொருத்து கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை விவசாயிகள் நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விவசாய உரிமையாளர், பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி அல்லது சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்பு குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இதனை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான காப்பீட்டு கவரேஜ், சேமிப்பு கணக்கு, ஸ்மார்ட் கார்டு மற்றும் டெபிட் கார்டு களுக்கான குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். எனவே, இதுவரை கிசான் கிரெடிட் கார்டு பெறாத விவசாயிகள் உடனே விண்ணப்பித்து இதனை பெற்றுக் கொள்ளுங்கள்.