வெறும் 53 வினாடிகள் மட்டுமே..!! குறைவான நேரம் பறக்கும் உலகின் மிகக் குறுகிய விமானம் பற்றி தெரியுமா..?
குறைவான நேரத்தில் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு விமானப் பயணம் தான் சிறந்த வழி..இருப்பினும், சில சர்வதேச விமானங்களில் பயணம் செய்ய நீண்ட நேரம் எடுக்கும். உதாரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறக்குறைய 20 மணிநேரம் ஆகும். இருப்பினும், உலகின் மிகக் குறுகிய விமான பயணம் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உலகின் மிகக் குறுகிய விமான பயணத்தின் காலம் சில நிமிடங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. அது ஒரு சில வினாடிகள் மட்டுமே இருக்கும். ஆம், வடக்கு ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே (Westray) மற்றும் பாப்பா வெஸ்ட்ரே தீவுகளுக்கு (Papa Westray) இடையிலான விமான பயணத்தின் கால அளவு வெறும் 53 வினாடிகள் தான்.
உலகின் மிகக் குறுகிய திட்டமிடப்பட்ட பயணிகள் விமானம் வெஸ்ட்ரே மற்றும் பாப்பா வெஸ்ட்ரே இடையே இயக்கப்படுகிறது. இந்த பாதையில் சராசரி விமான நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவானது. இருப்பினும் விமானங்கள் ஒன்றரை நிமிடங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸ் மற்றும் தீவுகளுக்கு சேவை செய்யும் ஸ்காட்லாந்தை சேர்ந்த விமான நிறுவனமான லோகனேயர், இந்த வழித்தடத்தில் பறக்கிறது. கூடுதலாக, இது ஓர்க்னி தீவுகளின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கிர்க்வாலை வெஸ்ட்ரே தீவுடன் இணைக்கும் ஒரு இணைப்பு விமானத்தின் ஒரு அங்கமாகும்.
லோகனேயர் விமானங்கள் 1967 ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டதிலிருந்து, வரலாற்றில் மிகக் குறைவான நேரத்தில் திட்டமிடப்பட்ட விமானங்கள் என்ற சாதனையை படைத்தது.. இந்த விமானங்கள் தற்போது வரை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த தீவுகளுக்கு இடையே பயணிகள் படகுகளும் இயக்கப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு திசைக்கு 13 புறப்பாடுகள் உள்ளன. ஒரு தீவில் 600 பேர் வாழ்கின்றனர், மற்றொரு தீவில் 90 பேர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.