தமிழ்நாடு அரசின் ”சேவை இல்லம்” திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.50,000 கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகள், நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இருக்க இருப்பிடம், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கும் நோக்கில் ”சேவை இல்லம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, சிவகங்கை, கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இந்த சேவை இல்லத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு 5ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சேவை இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தொழில் திறன் கல்விகளும் வழங்கப்படுகிறது. இந்த சேவை இல்லத்தில் மூலம் 12ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு, அவர்களின் தொழிற்சார் படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் பட்ட படிப்புகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த சேவை இல்லத்தில் கல்விசார் திறன்களை மேம்படுத்த கணினி பயிற்சி, ஆங்கிலம் மற்றும் உயர் படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி தெரியாதவர்களுக்கு தெரிய வைத்து அவர்களை பயனடைய செய்யுங்கள்.