ஆண்களுக்கு ஏற்படும் பிறவி இதய நோய் பற்றி தெரியுமா..? அறிகுறிகளும்.. காரணங்களும்..
இதயக் குறைபாடுகள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் உருவாகலாம். சிலருக்கு அவை பிறப்பிலிருந்தே இருக்கலாம், இந்த நிலையை பிறவி இதய நோய் அல்லது CHD என்று அழைக்கப்படுகின்றன.
இதய நோய் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள இறப்புகளுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. ஆண்களும் பெண்களும் இருதய நோய்களை (CHD) உருவாக்கும் அபாயத்தில் இருந்தாலும், பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கும் என்று அறியப்படுகிறது. பெண் இறப்புகளில் 16.9% உடன் ஒப்பிடும்போது 20.3% ஆண் இறப்புகளுக்கு CHD கள் காரணம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
குழந்தை பிறந்தவுடன் CHD அறிகுறிகளை ஆரம்பத்திலையே அடையாளம் காணப்படுகிறது. ஆரம்பத்திலையே அறிகுறிகளை கண்டறிவதால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கலாம். தாமதமாக கண்டறியப்பட்டால், குழந்தை தீவிரமாக பாதிக்கப்படலாம் அல்லது வளரும் போது சிக்கல்களை உருவாக்கலாம்.
CHD -ன் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பது கடுமையான உடல்நலப்பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதையும், பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும், கொல்கத்தாவின் இருதயவியல் துறை டாக்டர் குந்தல் ராய் செளதுரி கூறுகிறார்.
குழந்தைகளில் பிறவி இதய நோயின் அறிகுறிகள் ;
ஒரு பெரியவர் அல்லது ஆரோக்கியமான குழந்தையின் இதய துடிப்பை கேட்கும் போது, சாதாரண இதயத் துடிப்பு போன்ற ஒரு மெல்லிய சத்தம் கேட்கிறது. ஆனால், CHD உள்ள குழந்தைகளுக்கு, ஒலியானது உயர்தர 'ஸ்வூஷ்' போன்ற சத்தம் கேட்கும். குழந்தை நன்றாக சாப்பிடுவதில்லை, சாப்பிடுவதை விட தூங்க விரும்புகிறது. சில நேரம் குழந்தை அதிகம் சாப்பிடுகிறது போன்ற அறிகுறிகள் தோன்றினால் CHD உறுதி செய்யப்படுகிறது.
மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் சாதாரண குழந்தைகளைப் போல குழந்தை எடை அதிகரிக்காது. இந்த நிலை 'செழிக்கத் தவறுதல்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தை உணவு அருந்தியதை தொடர்ந்து, மூச்சுத் திணறல் மற்றும் தொடர் இருந்து கொண்டே இருக்கும். தூய்மையான மற்றும் தூய்மையற்ற இரத்தத்தின் கலவையால் குழந்தையின் உதடு மற்றும் விரல்களில் நீல நிறம் தோன்றும்.
சமீப காலமாக பிறவி இதய நோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அனைத்து எளிய மற்றும் சிக்கலான இதய நோய்களின் முடிவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. சரியான நேரத்தில் நோய் அறிகுறி கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கலாம். சிகிச்சை அளிக்க தவறினாலோ, தாமதப்படுத்தினாலோ உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.