For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!! எந்த வயதினர் விண்ணப்பிக்கலாம்..?

The central government has been implementing a free medical insurance scheme for senior citizens called Ayushman Bharat since 2018.
04:40 PM Nov 09, 2024 IST | Chella
ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி தெரியுமா    ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவம்     எந்த வயதினர் விண்ணப்பிக்கலாம்
Advertisement

ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை நடுத்தர மக்கள், உயர் நடுநிலை மக்கள், பணக்காரர்கள் என பாகுபாடின்றி 70 வயதை பூர்த்தியடைந்த அனைவரும் ஆதார் அட்டையை பயன்படுத்தி இலவச மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு பொருளாதார அளவுகோல் எதுவும் கிடையாது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். இதன் மூலம் அறுவை சிகிச்சை போன்ற பெரியளவிலான மருத்துவ சிகிச்சைகளையும் செய்து கொள்ளலாம்.

Advertisement

இலவச மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி..?

* https://beneficiary.nha.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஆயுஷ்மான் எனப்படும் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

* முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

* பின்னர், அதை ஓபன் செய்தால், நீங்கள் தகுதியுடையவரா என்பதை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்கப்படும். அதாவது, நீங்கள் 70 வயதை பூர்த்தி செய்தவர்தானா என்பதை உறுதி செய்ய ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.

* நீங்கள் 70 வயதை பூர்த்தி செய்யவில்லை எனில் இத்திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல.

* அதில், மத்திய அரசின் சுகாதர திட்டங்களான, மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான ஆயுஷ்மான் சி.ஏ.பி.எப் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற சில சுகாதார திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பயன்பெற்று வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்படும்.

* ஏனென்றால், இந்த திட்டங்கள் எதிலும் நீங்கள் பயன்பெறவில்லை என்றால் மட்டுமே இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

* பின்னர் ஆதார் எண், குடுப்ப அட்டை எண் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்த பின் தானாக சுய விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளும்.

* பின் செல்ஃபோன் மூலம் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின் தொடர்பு முகவரி, செல்ஃபோன் எண், குடும்ப உறுப்பினர்களில் 70 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேல் உள்ளவரகளின் விவரங்கள் ஆகிவற்றையும் பதிவிட வேண்டும்.

* இவை அனைத்தையும் சரியாக பதிவு செய்து முடித்தபின் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Read More : இந்த பிசினஸ் செய்தால் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! மத்திய அரசின் மானியமும் உண்டு..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Tags :
Advertisement