உங்கள் கண்களில் இந்த அறிகுறி இருக்கா..? மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம்..!!
உலகில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை நிறைய பேர் சந்தித்து வருகின்றனர். கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது இயற்கையாக நமது உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, அது உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது அந்நபருக்கு குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் தூண்டிவிட்டு, அவற்றை அறிகுறிகளாக வெளிக்காட்டத் தொடங்கும். அந்த அறிகுறிகளை கவனித்து மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம். முக்கியமாக கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது கண்கள் மற்றும் முகத்தில் ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும்.
மஞ்சள் நிற திட்டுகள்: கண் இமைகளைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் திட்டுக்கள் காணப்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும். இவை பெரும்பாலும் தீங்கற்றவை. இருப்பினும் இப்படியான திட்டுக்கள் இதய நோயின் அபாயம் அதிகம் இருப்பதைக குறிக்கிறது.
மஞ்சள் நிற தோல்: எப்போது ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது சருமமானது மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதை ஹைப்பர்லிபிடெமியா என்று அழைப்பர். பெரும்பாலும் இது முகத்தில் தான் தென்படும். அதுவும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெரியும்.
கார்னியாவைச் சுற்றியுள்ள வளையம்: பொதுவாக 40 வயதிற்குட்பட்டவர்களின் கண்களில் கார்னியல் ஆர்கஸ் காணப்படுகிறது. இது கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளை அல்லது சாம்பல் நிற வளையமாகும். இது ஆர்கஸ் செனிலிஸைப் போன்றே இருக்கும். இப்படி கண்களின் கருவிழியைச் சுற்றி வளையங்களானது நன்கு தென்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
கார்னியாவில் மாற்றங்கள்: கண்களின் கருவிழியின் விளிம்பைச் சுற்றி ஏதேனும் வித்தியாசமான நிறத்தில் வளையங்கள் தெரிகிறதா? அதுவும் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் வளையங்கள் தெரிந்தால், அது கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற பிம்பிள்: இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், சருமத்தின் மேற்பரப்பிற்கு அடிப்பகுதியில் உள்ள செல்களில் கொலஸ்ட்ரால் தேங்கி, சாந்தோமாஸ் எனப்படும் தீங்கற்ற கட்டிகளை உருவாக்கும். இவை பார்ப்பதற்கு பிம்பிள் போன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதுவும் இந்த பிம்பிள் கன்னங்கள், கண் இமைகள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும். இந்த மாதிரியான பிம்பிள் வலிக்காவிட்டாலும், அவை அதிக கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!