முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செக்ஸ் வாழ்வில் அதிக திருப்தி..!! இந்த பழக்கத்தை கைவிட்டாலே போதும்..!! அந்த பிரச்சனை வராது..!!

In women, this habit causes the ovarian reserve to decrease. This leads to dryness in the genital area and pain during intercourse.
04:58 PM Sep 23, 2024 IST | Chella
Advertisement

புகைப்பழக்கம் எண்ணற்ற ஆரோக்கிய கேடுகளை மனிதர்களுக்கு பரிசாக அளிக்கிறது. தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதனை படிப்படியாக கைவிட்டால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதில் முக்கியமான ஒன்று தான் பாலியல் வாழ்க்கை. ஆம், பாலியல் வாழ்க்கையில் சிக்கலை எதிர்கொண்டுள்ளவர்கள் புகைப்பழக்கம் கொண்டிருந்தால், அதனை கைவிடுவதன் மூலம் பாலியல் உறவு மேம்படும். புகைப்பிடிப்பதால் சருமம், நுரையீரல், இதயம், இனப்பெருக்க அமைப்பு, நோயெதிர்ப்பு மண்டலம் என பலவற்றுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Advertisement

பாதிப்புகள்:

சிகரெட் பழக்கம் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாக வழிவகுக்கிறது, இது ஆணின் விந்தணு DNA-வுக்கு ஆக்ஸிடேட்டிவ் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது விந்தணுக்களின் அசாதாரண வடிவம், விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் விந்தணு இயக்கத்தில் மாற்றம் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நீண்டகாலமாக புகைப்பழக்கம் உள்ளவர்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கை பூஜ்ஜியமாக வழிவகுக்கிறது.

புகைப்பழக்கத்தால் ஆண், பெண் இருவரையும் பாதிக்கலாம்...

புகைப்பழக்கம் இரு பாலினத்தவரின் பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். புகைப்பழக்கம் ஆண்களில் புகைபிடித்தல் விறைப்பு குறைபாடு போன்ற பாலியல் கோளாறுகளை ஏற்படுத்தலாம். விறைப்புத்தன்மை குறைபாடு தவிர ஆண்குறியை நிமிர்த்தி வைத்திருப்பதில் சிக்கல்கள் மற்றும் உடலுறவுக்கான விருப்பம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். இந்த பழக்கம் ஆண்குறி விறைப்புத்தன்மையை அடைய உதவும் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை சேதப்படுத்துவதாக கூறுகின்றனர்.

பெண்களில் இந்த பழக்கம் ovarian reserve குறைவதற்கு காரணமாகிறது. இது பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் உடலுறவின் போது வலி ஏற்பட வழிவகுக்கிறது. எனவே புகைப்பழக்கத்தை கைவிடுவது பொதுவாக எதிர்கொள்ளும் பல பாலியல் சிக்கல்களில் இருந்து விடுபட உதவுகிறது. பாலியல் செயல்திறனை அதிகரிக்க புகைப்பழக்கத்தை நிறுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

* புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதால் பாலியல் தூண்டுதல் அதிகரிக்கும் மற்றும் செக்ஸ் வாழ்வில் அதிக திருப்தியாக இருக்க வழிவகுக்கிறது. புகைபிடிக்கும் நபர்களுடன் ஒப்பிடுகையில் புகைபிடிக்காத ஆண்கள் இருமடங்கு அளவு உடலுறவு கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* புகைப்பழக்கத்தை கைவிட்ட ஆண்கள் வேகமான அதே சமயம் உறுதியான விறைப்புத்தன்மையை பெற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்த நாளங்களின் சுருக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், விறைப்புத்தன்மையை பராமரிக்க தேவையான ரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது.

* புகைப்பழக்கம் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் உடலின் திறனை பாதிக்கிறது. இது நமது ஆற்றலில் 90% உற்பத்திக்கு காரணமாகும். தொடர்ந்து புகைபிடிப்பதால் ஸ்டாமினா லாஸ் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படலாம் தவிர உங்கள் பாலியல் வாழ்க்கையின் செயல்திறனை பாதிக்கலாம்.

* புகைப்பிடிப்பதால் ஏற்படும் லிபிடோ லெவல் குறைவு காரணமாக பாலுறவு செயல்திறனில் ஏற்படும் குறைவால் படுக்கையில் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் திருப்தி ஏற்படாமல் போகலாம். புகைப்பழக்கத்தை கைவிட்டால் இன்பமான செக்ஸ் வாழ்க்கைக்கு அது உறுதுணையாக இருக்கும்.

Read More : ’என்னுடைய திரை வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்’..!! ’இனி நடிக்க மாட்டேன்’..!! அதிரடியாக அறிவித்த பிரபல நடிகர்..!!

Tags :
செக்ஸ் வாழ்க்கைதாம்பத்தியம்பாலியல் உறவு
Advertisement
Next Article