For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்படினா சுகப்பிரசவம் தான்..? எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா..?

There are certain signs that indicate a healthy delivery during labor. We will look at them in detail in this post.
05:30 AM Jan 10, 2025 IST | Chella
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா    அப்படினா சுகப்பிரசவம் தான்    எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா
Advertisement

பிரசவ காலங்களில் சுகப்பிரசவம் ஆவதைக் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

Advertisement

அனைத்து தாய்மார்களும் சுகப் பிரசவம் மூலமாகவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாவது மாதம் தொடங்கியதுமே நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அவற்றை நுண்ணியமாக கணித்து சுகப் பிரசவம் தான் என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம்.

சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களுக்கு முன்னர் இந்த பிரசவ அறிகுறி தென்படும். உங்களது செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும் பொழுது 10 சென்டி மீட்டர் என்ற அளவை அடைந்து இருக்கும். இந்த நேரத்தில் செர்விக்ஸ் கிளான்டானது சளி மாதிரியான திரவத்தைச் சுரக்கத் தொடங்கும். இந்த சளியானது சற்று அடர்த்தியான தன்மையோடு காணப்படும். சில சமயங்களில் இதனோடு இரத்தம் அல்லது இரத்தக்கட்டிகள் காணப்படும்.

பிரசவம் நிகழப் போவதற்கான இந்த அறிகுறி பல கர்ப்பிணிப் பெண்களிடம் காணப்படுகின்றன. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ஏழாம் மாதம் தொடக்கத்திலிருந்தே குழந்தையின் அசைவு நன்கு தெரியத் தொடங்கும். குழந்தை அடிக்கடி கை கால்களை உதைக்கும். வெவ்வேறு திசைகளில் நெளியும். ஆனால் பிரசவ காலம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் அசைவு குறைந்திருக்கும். இந்த அறிகுறியும் சுகப் பிரசவம் ஏற்படப் போவதை உணர்த்தும்.

Read More : HMPV-ஐ தொடர்ந்து Mpox..!! பீதியை கிளப்பும் சீனா..!! உருமாறிய வைரஸ் கண்டுபிடிப்பு..!! அறிகுறிகள் இதுதான்..!! தொட்டாலே பரவுமாம்..!!

Tags :
Advertisement