உடைந்த எலும்புகளை கூட ஒட்ட வைக்கும் அற்புத மருந்து; கட்டாயம் இந்த கீரையை வாரம் 1 முறை சாப்பிடுங்க..
பலரை பாடாய் படுத்தும் நோய் என்றால் அது மூலம் தான். பலர் அனுதின வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் பல ஆயிரங்கள் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. பெரும்பாலும், நாம் வீட்டு வைத்தியத்திலேயே நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவது தான் நல்லது. அந்த வகையில், பாடாய் படுத்தும் மூல நோயை விரட்டி அடிக்க, இதய வடிவில் இருக்கும் துத்திக் கீரை பெரிதும் உதவும். மருந்தாக பயன்படுத்தப்படும் இந்த கீரையை, வாரம் 1 முறை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம். மூல நோய் உள்ளவர்கள், இந்த கீரையை விழுதாக அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தால், மூல நோய் அடியோடு விரட்டப்படும்.
மேலும், இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாயு தொல்லை, குடல் புண், செரிமான கோளாறு, அதிக உடம்பு சூடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். உடம்பில் ஏற்படும் கட்டி மற்றும் புண்களை அகற்ற, இந்த கீரையின் சாறை அரிசி மாவுடன் கலந்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சனை, வெள்ளைப்படுதல் ஆகியவற்றை இதை விட சிறந்த மருந்து கிடையாது. வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த கீரையை நெய்யில் வதக்கி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வளவு ஏன், எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தல், இந்த இலையை அரைத்து பூசினால் விரைவில் எலும்புகள் ஒன்று சேருமாம். ஆனால் அந்த பகுதியை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். இந்த கீரையில் ரசம் செய்து குடித்தால், சிறுநீரக பிரச்சனைகள் அடியோடு நீங்கிவிடும். வாய், பற்கள், இரைப்பை மற்றும் பெருங்குடல், பிரச்சனைகளுக்கு இந்த கீரை நிரந்தர தீர்வு அளிக்கும். படர்தாமரைக்கு சிறந்த மருந்து என்றால் அது இந்த கீரையாக தான் இருக்க முடியும். இந்த கீரையின் பூக்கலை, பசும்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்தால் ஆஸ்துமா, காசநோய் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்.