முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் வீட்டில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இந்த பொருட்கள் இருக்கா..? உடனே தூக்கிப் போடுங்க..!!

04:20 PM May 03, 2024 IST | Chella
Advertisement

நம் வீட்டில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள், மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், அவை உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என குருகிராமைச் சேர்ந்த பிரபல மருத்துவர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் : உணவுகளை பாதுகாக்கவும், அடைத்து வைக்கவும் பிளாஸ்டிக் கண்டெய்னர்களை பயன்படுத்த வேண்டாம். அதில் உள்ள ரசாயனங்கள் பல்வேறு விதமான உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், எவர் சில்வர் கண்டெய்னர்களை பயன்படுத்துங்கள்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கும்போது, அவற்றில் பூசியுள்ள ரசாயனக் கலவைகள் நச்சு வாயுக்களை வெளியேற்றும். அவை புற்றுநோயை உண்டாக்குவதோடு, உள் உறுப்புகள் செயலிழப்புக்கும் வழிவகுக்கிறது. எனவே பீங்கான், எவர் சில்வர் பாத்திரங்கள், வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.

நறுமணப் பரப்பிகள் : நாம் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறோமோ இல்லையோ, ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சந்தையில் விற்கப்படும் பலவிதமான ஏர் ஃபிரஷ்னர்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதைவிட ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஏர் ஃபிரஷ்னர்களுக்கு பதிலாக நறுமண எண்ணெய்களை பயன்படுத்தலாம். அதைவிட, வீட்டை காற்றோட்டமாக வைத்திருந்தாலே, துர்நாற்றம் வீசுவதை தவிர்க்கலாம்.

சுத்தப்படுத்தும் பொருட்கள் : வீடுகள், பாத்திரங்கள் மற்றும் துணிகளை சுத்தம் செய்ய நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்களில் அம்மோனியா, பிளீச் போன்ற கடுமையான ரசாயனங்கள் இருக்கின்றன. இவை தோல் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், நீண்டகால பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு மாற்றாக வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

டிரையர் ஷீட்ஸ் : வாஷிங் மெஷின்களில் டிரையர் ஷீட்களை பயன்படுத்துவதன் மூலம் அதில் இருந்து வெளியாகும் நச்சுவாயுக்கள் நமக்கு பலவிதமான உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக, கம்பளி உலர் பந்துகளை பயன்படுத்தலாம்.

பூச்சி மருந்துகள் : பூச்சி மருந்துகளில் கடுமையான ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவை தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ரசாயனப் பூச்சிக் கொல்லிகளை தவிர்த்து, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். விரிசல்களை அடைப்பது, பூச்சிகளுக்கான உணவுகளை அகற்றுவது போன்றவற்றை செய்ய வேண்டும்.

Read More : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

Advertisement
Next Article