மக்களே..!! இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..?
பான் கார்டு மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம். இந்த கார்ட் வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
அதிக வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம். ஒரு நபரால் பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. நாம் செய்யும் பல முக்கியமான விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம். ஒருவர் வங்கிக் கணக்கை தொடங்க பான் கார்டு தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு அவசியம். அந்த, டிமேட் கணக்கை பான் கார்டு இல்லாமல் திறக்க முடியாது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணத்தை அனுப்புவதற்கு பான் கார்டு தேவை. இது தவிர, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கும் பான் கார்டு அவசியம்.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்ட் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டை பயன்படுத்த முடியாது. அந்த ஒரு பான் கார்டைத்தான் பண பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்த முடியும்.
Read More : ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபடும் நபர்..!! அவர் சொல்லும் விசித்திர காரணம்..!!