முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களிடம் பான் கார்டு இருக்கா..? இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!

08:38 AM May 13, 2024 IST | Chella
Advertisement

பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். இந்த கார்டு வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவை என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

அதிக வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம், இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயம். ஒரு நபரால் பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு அவசியம்?

நாம் செய்யும் பல முக்கியமான விஷயங்களுக்கு பான் கார்டு வைத்திருக்க வேண்டும். ஒருவர் வங்கிக் கணக்கை தொடங்க பான் கார்டு தேவை. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு அவசியம். அந்த டிமேட் கணக்கை பான் கார்டு இல்லாமல் திறக்க முடியாது. 50,000 ரூபாய்க்கும் மேல் பணத்தை அனுப்புவதற்கு பான் கார்டு அவசியம். இது தவிர, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கும் பான் கார்டு அவசியம்.

முக்கியமாக, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்ட் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டை பயன்படுத்த முடியாது. அந்த ஒரு பான் கார்டைத்தான் பணப்பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்த முடியும்.

Read More : ’சவுக்கு சங்கர் நிலைமை தான் என் கணவருக்கும்’..!! ’2 நாட்களாக எந்த தகவலும் இல்லை’..!! பெலிக்ஸ் மனைவி பரபரப்பு பேட்டி..!!

Advertisement
Next Article