For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உடலுறவின்போது அதிக வலி உண்டாகிறதா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!!

05:15 AM Apr 16, 2024 IST | Chella
உடலுறவின்போது அதிக வலி உண்டாகிறதா    இது கூட காரணமாக இருக்கலாம்
Advertisement

ஒரு சிலருக்கு வலி மிகுந்த உடலுறவு என்பது பல காரணிகளால் ஏற்படலாம். ஒருவேளை அது உங்களுடைய முதல் உடல் உறவாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு ஏதேனும் பிறப்புறுப்பு தொற்று அல்லது எண்டோமெட்ரியோசிஸ் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இது வஜைனல் ஸ்டீனோசிஸ் (Vaginal Stenosis) என்ற நிலை காரணமாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்லது ரேடியேஷன் சிகிச்சையின் விளைவாக பிறப்புறுப்பு கால்வாய் மிகவும் குறுகியதாகவும், சிறியதாகவும் மாறிவிடுகிறது. இதனால் உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படுகிறது.

வஜைனல் ஸ்டீனோசஸ் ஏற்படுவதற்கான ஒரு சில காரணங்கள் :

* பிறப்பு உறுப்பு பகுதியில் நாள்பட்ட வீக்கம்.

* வஜைனல் ஏஜெனிசிஸ் அல்லது வஜைனல் செப்டம்.

* பிறப்பு உறுப்பு அல்லது கர்ப்பப்பை வாய் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள்.

* குழந்தை பிறப்பின்போது, ஏற்பட்ட பெல்விக் டிராமா அல்லது தீவிரமான பிறப்புறுப்பு தொற்றுகள்.

* கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது ரெக்டல் புற்றுநோய்க்காக செய்யப்பட்ட ரேடியேஷன் தெரபி.

வஜைனல் ஸ்டீனோசிஸின் சில அறிகுறிகள்

* வஜைனல் ஸ்டீனோசிஸுக்கான அறிகுறிகள் என்பது பிறப்புறுப்பு கால்வாய் எந்த அளவிற்கு குறுகி உள்ளது என்பது பொருத்து அமைகிறது.

* உடலுறவு கொள்வதில் சிரமம் அல்லது வலி.

* பிறப்பு உறுப்பு பகுதியில் குறைவான மசகு.

* பிறப்பு உறுப்பு வறட்சி.

* பெல்விக் பகுதியில் வலி அல்லது அசௌகரியம்.

* சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசரம் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

* அடிக்கடி பிறப்பு உறுப்பில் தொற்று அல்லது எரிச்சல்

வஜைனல் ஸ்டீனோசிஸ் எவ்வாறு பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது..?

வலி மிகுந்த உடலுறவு வஜைனல் ஸ்டீனோசிஸ் காரணமாக ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான விளைவுகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக ஆணுறுப்பு மிக ஆழமாக செல்லும்போது, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. குறுகிய அல்லது சிறிய பிறப்புறுப்பு கால்வாய் இருப்பதினால் ஒரு சில நிலைகளில் உடலுறவு கொள்வதை அசௌகரியமாகவும் வலி மிகுந்ததாகவும் அந்த பெண் உணரலாம்.

ஆணுறுப்பை உள்ளே செலுத்துவதில் சிக்கல்… பிறப்புறுப்பு கால்வாயின் நீளத்தை விட ஆணுறுப்பு நீளமாக இருக்கும் பட்சத்தில் அதனை உள்ளே செலுத்துவது சவாலான காரியமாக இருக்கும். இதனால் எரிச்சல் ஏற்பட்டு, உடல் உறவில் திருப்தி அடைவது கடினமாகிறது.

வஜைனல் ஸ்டீனோசிஸுக்கு என்னென்ன மாதிரியான சிகிச்சைகள்..?

வஜைனல் டைலேட்டர்கள் : பிறப்புறுப்பு திசுக்களை பொறுமையாக விரிவடைய செய்வதற்கு உருளை வடிவ சாதனங்களான வஜைனல் டைலேட்டர்கள் செருகப்படுகின்றன. இது பிறப்புறுப்பு கால்வாயை விரிவடைய செய்து உடலுறவின் போது ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

பிசிக்கல் தெரபி : இந்த சிகிச்சையில் பெல்விக் பகுதியில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் அடைய செய்வதற்கு நீங்கள் ஒரு சில உடற்பயிற்சிகளையும், நுட்பங்களையும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

அறுவை சிகிச்சை : ஒரு சில நேரங்களில் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள அசாதாரணத்தை போக்குவதற்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

ஹார்மோன் தெரபி : ஈஸ்ட்ரோஜன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி போன்ற ஹார்மோன் தெரபி மூலமாக பிறப்புறுப்பு மசகு மேம்படுத்தப்பட்டு திசுக்களின் ஆரோக்கியம் ஊக்குவிக்கப்படுகிறது. கிரீம்கள் அல்லது மருந்து மாத்திரைகள் மூலமாக இந்த ஹார்மோன் சிகிச்சை வழங்கப்படுகிறது.

Read More : அடடே..!! இது உங்களுக்கு தெரியுமா..? வெறும் ரூ.150 இருந்தால் விமானத்தில் பயணிக்கலாம்..!!

Advertisement