For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கா..? இந்த விஷயத்தை உடனே பண்ணுங்க..!! இல்லையென்றால் கிடைக்காது..?

07:41 AM May 10, 2024 IST | Chella
உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கா    இந்த விஷயத்தை உடனே பண்ணுங்க     இல்லையென்றால் கிடைக்காது
Advertisement

இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்கிற்கு மானியத் தொகை செலுத்தப்படுகிறது. மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் 41 லட்சம் இலவச பயனாளிகள் என மொத்தம் 2.33 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், ”சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் கைரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது எரிவாயு இணைப்புடன் அவர்களது கைரேகையை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.

இது தவிர முக பதிவு மூலமாகவும் வாடிக்கையாளர்களின் சரிபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஏஜென்சிக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஏஜென்சிக்கு செல்ல முடியாதவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மொபைல் போன் செயலி மூலம் முகம் பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு எவ்வித காலக்கெடுவும் கிடையாது. கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இதற்காக, வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அத்துடன், இந்த நடைமுறைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கொட்டிக் கிடக்கும் வேலை..!! லட்சங்களில் மாத சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Advertisement