இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? இனி பயன்படுத்த முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!
பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள், 3 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகள் அனைத்தும் மொத்தமாக மூடப்பட இருக்கிறது. இப்படி இருக்கும் வங்கி கணக்குகளுக்கு மே 31ஆம் தேதிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, வங்கி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு பெரும் தொல்லையாக இருப்பது, இந்த மினிமம் பேலன்ஸ் விதிகள்தான்.
இது வங்கிக்கு வங்கி மாறினாலும், அதை பராமரிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதனால், வங்கியில் குறிப்பிட்ட தொகையை எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
பல வாடிக்கையாளர்கள் இதனை கண்டு கொள்ளலாமல், அவர்களது வங்கி கணக்கில் பணமே இல்லாமலேயே வைத்திருப்பார்கள். அதேபோல வங்கி கணக்கை ஆரம்பித்துவிட்டு, பல ஆண்டுகள் அதில் எந்தவித பரிவர்த்தனைகளையும் செய்யாமலும் பலர் இருப்பார்கள்.
அவர்களுக்காக தான் இப்போது அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, புதிய விதிகளின்படி, பணமே இல்லாத வங்கி கணக்குகள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகள் மூடப்பட உள்ளன. இப்படி செய்யப்படாமல் இருக்க கேஒய்சி (KYC) ஆவணங்களை சமர்பிக்க மே 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் கணக்கு தொடங்கிவிட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக (ஏப்ரல் 30 2024ஆம் ஆண்டு வரையில்) பயன்படுத்தாமல் இருந்தால், அது ஜூன் 1ஆம் தேதியில் மூடப்படும். அதேபோல பணமே இல்லாத கணக்குகளும், ஜீரே பேலன்ஸ் இருக்கும் கணக்குகளும் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டீமேட் கணக்குகளுடன் (DEMAT Accounts) இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள், லாக்கர்கள் (Lockers), மாணவர்கள் உள்பட 25 வயதுக்குட்பட்டவர்களின் வங்கி கணக்குகள், மைனர் வங்கி கணக்குகள் மூடப்படாது. ஆகவே, பிஎம்ஜேஜேபிஒய் (PMJJBY), பிஎம்எஸ்பிஒய் (PMSBY), எஸ்எஸ்ஒய்/ஏபிஒய் (SSY/APY) மற்றும் டிபிடி (DBT) கணக்குகள் மூடப்படாது. அதேபோல கோர்ட் அல்லது வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட கணக்குகளும் மூடப்படாது. இந்த கணக்குகள் அல்லாத மற்ற வங்கி கணக்குகள் அனைத்துக்கும் புதிய விதிகள் பொருந்தும்.
Read More : ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அப்ளை பண்ண மறந்துறாதீங்க..!!